யூ டேர்ன் போட்ட சென்செக்ஸ்! 660 புள்ளிகள் சரிவு!

கடந்த வியாழக் கிழமை (ஏப்ரல் 08, 2020) அன்று சென்செக்ஸ் ஒரு நல்ல ஏற்றம் கண்டு ஒட்டு மொத்த சந்தை முதலீட்டாளர்களையும் சந்தோஷப்படுத்தியது.

கடந்த வெள்ளிக் கிழமை புனித வெள்ளி திருநாள் என்பதால் சென்செக்ஸ் வர்த்தகமாகவில்லை. அதன்பின், இன்று தான் சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

இன்றைய வர்த்தகத்திலும் சென்செக்ஸ் எடுத்த எடுப்பிலேயே சுமார் 660 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

தொடவில்லை

தொடவில்லை

ஏப்ரல் 09, 2020, வியாழக்கிழமை, மாலை சென்செக்ஸ், 31,159 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 31,195 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் இன்றைய அதிகபட்ச புள்ளியே இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச புள்ளியாக 30,474 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. 660 புள்ளிகள் இறக்கம் கண்டு சென்செக்ஸ் 30, 475 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக முந்தைய நாள் குளோசிங் விலையை விட பெரிய ஏற்றப் புள்ளிகளைத் தொடவில்லை.

டெக்னிக்கல்

டெக்னிக்கல்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸின் டெக்னிக்கல் சார்ட்டைப் பார்த்தால் கூட இந்த ஏற்ற டிரெண்டை மாற்றும் விதத்தில் ஒரு குட்டி Hanging Man பேட்டன் உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஏற்ற டிரெண்ட் காலி ஆகி மீண்டும் இறக்க டிரெண்ட் சென்செக்ஸில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.

பி எஸ் இ

பி எஸ் இ

சென்செக்ஸின் 30 பங்குகளில் 04 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,771 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 632 ஏற்றத்திலும், 1,024 பங்குகள் இறக்கத்திலும், 115 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

மெற்கத்திய நாடுகளிலும் புனித வெள்ளி கொண்டாடப்படும் என்பதால், அங்கும் ஏப்ரல் 10, 2020 அன்று வர்த்தகம் நடைபெறவில்லை. ஏப்ரல் 09, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் 0.77 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 2.90 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.44 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.24 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்ரு ஏப்ரல் 13, 2020 திங்கட்கிழமை, வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் அனைத்து ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசிய சந்தைகள் சுமாராக 0.10 - 2.12 % வரை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹாங்காங் நாட்டின் ஹேங்செங் சந்தை இதுவரை வர்த்தகமாகத் தொடங்கவில்லை.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், சிப்லா, சன் பார்மா, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், டைடன் கம்பெனி மஹிந்திரா & மஹிந்திரா, ஓ என் ஜி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+