31,000 புள்ளிகளை தொடாத சென்செக்ஸ்! வருத்தத்தில் முதலீட்டாளர்கள்!

சென்செக்ஸ் கடந்த 24-03-2020 அன்று, கொரோனாவுக்குப் பிறகான வாழ் நாள் இறக்கப் புள்ளியாக 25,638 புள்ளிகளைத் தொட்டது. அதன் பிறகு 30-04-2020 வரை ஓரளவுக்கு நன்றாக ஏற்றம் கண்டது. ஏப் 30, 2020 அன்று, சென்செக்ஸ், கொரோனா வீழ்ச்சிக்குப் பிறகான உச்சப் புள்ளியாக 33,887 புள்ளிகளைத் தொட்டது.

31,000 புள்ளிகளை தொடாத சென்செக்ஸ்! வருத்தத்தில் முதலீட்டாளர்கள்!

ஆனால் அதன் பின் தொடர்ந்து சென்செக்ஸ் சரிந்து கொண்டே இருக்கிறது. இதுவரை சென்செக்ஸ் மீண்டும் தன் ஏற்ற டிரெண்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை. சரி இன்றைய சென்செக்ஸ் & உலக சந்தைகள் கள நிலவரத்தைப் பார்ப்போம்.

சென்செக்ஸ் நிலவரம்

நேற்று மாலை சென்செக்ஸ், 30,609 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,793 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமார் 257 புள்ளிகள் கேப் அப்பை தக்க வைத்து வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,525 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 30,852 புள்ளிகளைத் தொட்டு 243 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,827 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 900 பங்குகள் ஏற்றத்திலும், 827 பங்குகள் இறக்கத்திலும், 100 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

மே 26, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.17 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. லண்டனின் எஃப் டி எஸ் இ 1.24 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.46 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.00 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. இந்த ஏற்றம் தற்போது இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

ஆசியா

ஆசியாவில் ஹாங்காங், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா போன்ற நாட்டுச் சந்தைகளைத் தவிர்த்து மற்ற எல்லா சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 0.91 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

பங்கு விலை நிலவரம்

ஆக்ஸிஸ் பேங்க், யூ பி எல், ஐசிஐசிஐ பேங்க், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

டாலர் & கச்சா எண்ணெய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75.50 ரூபாய்க்கு கீழ் இப்போது வராது போலிருக்கிறது. இன்று 75.58 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்னெய் விலை சுமாராக 36 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+