ஏற்றத்தில் சென்செக்ஸ்! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

கடந்த மே 13, 2020-ல் இருந்து, சென்செக்ஸ் தொடர்ந்து சரிந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதுவரை ஏற்ற டிரெண்டுக்குப் போகவில்லை.

கடந்த 30 ஏப்ரல் 2020 அன்று வரை ஏற்ற டிரெண்டில் இருந்த சென்செக்ஸ், இப்போது இறக்க டிரெண்டில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த டிரெண்ட் எப்போது மாறும் என முதலீட்டாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இன்று சென்செக்ஸில் நிலவரம் என்ன? எந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன, உலக சந்தைகள் என்ன ஆயின? வாருங்கள் பார்ப்போம்.

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிலவரம்

மே 18, 2020 அன்று மாலை சென்செக்ஸ், 30,028 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,450 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமார் 420 புள்ளிகள் கேப் அப்பில் தொடங்கினாலும் ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,187 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 30,027 புள்ளிகளைத் தொட்டு 10,70 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 27 பங்குகள் ஏற்றத்திலும், 03 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,372 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 779 பங்குகள் ஏற்றத்திலும், 519 பங்குகள் இறக்கத்திலும், 63 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

மே 18, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 2.44 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. லண்டனின் எஃப் டி எஸ் இ 4.29 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 5.16 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 5.67 % சூப்பர் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. இன்றும் அந்த ஏற்றத்தை இந்த சர்வதேச சந்தைகள் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை மதியத்துக்கு மேல் தான் பார்க்க முடியும்.

ஆசியா

ஆசியா

ஆசியாவில் எல்லா சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங்செங் 1.82 % ஏற்றத்திலும், தென் கொரியாவின் கோஸ்பி 1.83 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தான் இருப்பதிலேயே குறைவாக 0.53 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்படி எல்லா நாட்டுப் பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகும் போது இந்திய சந்தைகளும் பாசிட்ட்வாக வர்த்தகமாகத் தானே செய்யும்.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

பார்தி ஏர்டெல், ஓ என் ஜி சி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. யூ பி எல், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, வேதாந்தா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+