வரலாற்று உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன..?

சென்னை: மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று மதிய வர்த்தகத்தில் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 50 குறியீடு 23,600 என்ற அளவைக் கடந்துள்ளது முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 556.04 புள்ளிகள் உயர்ந்து 77,921.97 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் வரலாற்று உச்ச அளவீடாக 77956.67 புள்ளிகளை தொட்டு உள்ளது.

வரலாற்று உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன..?

இதை தொடர்ந்து நிஃப்டி குறியீடு 142.80 புள்ளிகள் உயர்ந்து 23,680.65 புள்ளிகளைத் தொட்டு உள்ளது, இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 23,692.25 புள்ளிகளைத் தொட்டு உள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் இன்று சிறப்பான லாபத்துடன் இயங்கி வருகிறது. குறிப்பாக, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனங்களின் பங்குகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

நிஃப்டி குறியீட்டில் இன்று Ultratech Cement, HDFC Bank, Divi's Lab, Coal India, SBI ஆகியவை அதிக லாபம் ஈட்டிய பங்குகளாக உள்ளது. இதேபோல் HCL Tech, Asian Paints, Titan ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்த பங்குகளாக உள்ளது.

மேலும் இன்று கலை வர்த்தகத்தில் ஆசியச் சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஹாங்காங் ஆகிய பங்குச்சந்தைகள் உயர்விலும், ஷாங்காய் பங்குச்சந்தை மட்டும் சரிவில் உள்ளது. ஆனால் ஐரோப்பியச் சந்தை துவங்கிய உடன் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டு குறியீடு தடாலடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி வங்கி குறியீடு இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதேபோல் பிரபல ஐடி சேவை நிறுவனமான Happiest Minds நிறுவனத்தின் 8% பங்குகள் ஒரே நேரத்தில் வர்த்தகமாகின. இதனால் இந்நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளது.

ரூ.1,500 கோடி மதிப்பிலான Allied Blenders நிறுவனத்தின் பங்கு வெளியீடு (IPO) இன்று திறக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுக்கான புதிய இடம் உருவாகியுள்ளது. GIB EnergyX நிறுவனத்துடன் உரிம ஒப்பந்தம் கையெழுத்திட்டதால், அமரா ராஜா நிறுவனத்தின் பங்குகள் 18% உயர்ந்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி, பந்தன் வங்கி-ன் நிர்வாக குழுவில் ஒரு இயக்குநரை நியமித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் 3% சரிந்துள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, பந்தன் வங்கி-ன் செயல்பாடுகளைக் கண்காணிப்பதை மேம்படுத்த ஆர்பிஐ எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+