பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நிம்மதி!! 900 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ்!! இந்த ஏற்றம் நீடிக்குமா?

தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த இந்திய பங்கு சந்தைகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி முதலீட்டாளர்களை கொண்டாட வைத்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் வரை உயர்ந்து தான் வர்த்தகத்தையே தொடங்கியது. அதே போல நிஃப்டி 50 குறியீடு 23,400 புள்ளிகளுக்கு மேல் சென்று வர்த்தகமானது. பல நாட்களுக்கு பின்னர் பங்குச்சந்தை பச்சை நிறமாக காட்சி தந்தது. இந்திய பங்குச்சந்தைகளின் இந்த ஏற்றத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நிம்மதி!! 900 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ்!! இந்த ஏற்றம் நீடிக்குமா?

அமெரிக்கா மற்றும் சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவிய சாதகமான சூழ்நிலை, இந்திய சந்தையிலும் முதலீட்டாளர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடியுள்ளன. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.அமெரிக்க பங்குச்சந்தை சுமார் 2.54 சதவீதம் உயர்ந்து வர்த்தகத்தை முடித்தது. அதேபோல ஜப்பானின் நிக்கி தென் கொரியாவின் காஸ்பி ஆகியவையும் 4 முதல் 8 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. இதன் தாக்கும் இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது.

Also Read

அதே வேளையில் அமெரிக்கா மற்றும் ஈரான் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு சாதகமான சூழல் உண்டானதை அடுத்து பிரண்ட் கச்சா எண்ணெய் விலை இரண்டு சதவீதம் சரிவடைந்து 88.5 டாலர்களாக ஆனது. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததால் இந்தியாவில் பண வீக்கம் குறையும், பெட்ரோல் டீசல் விலைகள் குறையும், அமெரிக்க டாலர் கையிருப்பு அதிகமாகும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கினர்.

Recommended For You

குறிப்பிட்ட துறை மட்டுமில்லாமல், வங்கி, ஐடி, ஆட்டோமொபைல் என சந்தையின் அனைத்துப் பிரிவுகளிலும் முதலீட்டாளர்கள் பங்குகளை ஆர்வமாக வாங்கியுள்ளனர். குறிப்பாக, 'பேங்க் நிஃப்டி' குறியீடு 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகளும் இந்த ஏற்றத்திற்கு வலு சேர்த்துள்ளன. 'நிஃப்டி மிட்கேப் 100' மற்றும் 'நிஃப்டி ஸ்மால்கேப் 100' ஆகிய இரண்டு குறியீடுகளுமே தலா 1.5% வரை உயர்ந்துள்ளன.

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான சாதகமான எதிர்பார்ப்புகளும், இந்தியப் பொருளாதாரத்தின் மீதான வலுவான நம்பிக்கையும் முதலீட்டாளர்களை அதிகளவில் முதலீடு செய்யத் தூண்டியுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+