448 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

மீண்டும் சென்செக்ஸ், தன் சர சர ஏற்றத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 448 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (16 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 39,982 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,318 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,519 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 448 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,431 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று (19 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. தென் கொரியாவின் கோஸ்பி 0.83 % இறக்கத்தில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

இன்று (19 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.11 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.55 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.02 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

BSE நிலவரம்

BSE நிலவரம்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 07 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,817 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,490 பங்குகள் ஏற்றத்திலும், 1,170 பங்குகள் விலை இறக்கத்திலும், 157 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 104 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே, எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பஜாஜ் ஆட்டோ, டி சி எஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+