முதலீட்டாளர்களுக்கு 2023ல் ஜாக்பாட் தான்.. சென்செக்ஸ் கனவு இலக்கு.. நிபுணர்களின் பலே அப்டேட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிப்பு, சீனா தாய்வான் பிரச்சனை, சீனா - அமெரிக்கா உட்பூசல், சீனா - இந்தியா எல்லை பிரச்சனை என உலக நாடுகள் பலவும் அரண்டு போயுள்ளன. ரெசசன் வரலாம் என்ற அச்சத்தின் மத்தியில் இருந்து வருகின்றன. ஆனால் இப்படியான சவாலான நிலைக்கு மத்தியிலும் இந்திய சந்தையானது நேர்மறையாக உள்ளது.

இது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தினை இந்திய சந்தையின் பக்கம் திருப்பியுள்ளது எனலாம்.

ரூபாயின் மதிப்பு எப்படியிருக்க போகிறது.. அடுத்த ஆண்டில் ஆவது சர்பிரைஸ் கொடுக்குமா? ரூபாயின் மதிப்பு எப்படியிருக்க போகிறது.. அடுத்த ஆண்டில் ஆவது சர்பிரைஸ் கொடுக்குமா?

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஏன்?

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஏன்?

நடப்பு ஆண்டில் இந்திய சந்தையில் இதுவரையில் 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈக்விட்டிகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதே கடந்த 2021ல் 3.76 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருந்தனர். 2021 ஐ காட்டிலும் அதிகளவில் முதலீடுகள் வெளியேறியுள்ளனவே என்ற கேள்வியானது பலருக்கும் எழுந்திருக்கலாம். எனினும் இந்திய சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை எட்டி வந்த நிலையில், முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்து வெளியேறியுள்ளனர் எனலாம்.

மீண்டும் முதலீடுகள் அதிகரிக்கலாம்

மீண்டும் முதலீடுகள் அதிகரிக்கலாம்

இந்திய சந்தையில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போதும் மீண்டும் முதலீடுகள் திரும்ப வரும். இதன் காரணமாக சந்தையானது மீண்டும் ஏற்றம் காணலாம். சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ரெசசன் அச்சம் இருந்து வரும் நிலையில், இது இந்திய சந்தைக்கு ஆதரவாக அமையலாம்.

சென்செக்ஸ், நிப்டி இலக்கு

சென்செக்ஸ், நிப்டி இலக்கு

இதற்கிடையில் தான் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம், பி எஸ் இ சென்செக்ஸ் 71,600 என்ற லெவலை டிசம்பர் 2023ல் தொடலாம் என கணித்துள்ளது. இது கடந்த அமர்வின் முடிவு விலையில் இருந்து 17% அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது. கடந்த அமர்வில் சென்செக்ஸ் 61,133.88 புள்ளிகளாக முடிவடைந்திருந்தது. இதே நிப்டி 21,500 என்ற லெவலை எட்டலாம் என்றும் கணித்துள்ளது.

ஒரு பங்கின் வருமானம்

ஒரு பங்கின் வருமானம்

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸின் கணிப்பில் 2024ம் நிதியாண்டில், நிஃப்டியின் ஒரு பங்கு வருமானம் 950 ரூபாயாக இருக்கலாம் என கணித்துள்ளது. இது 2023ம் நிதியாண்டில் 785 ரூபாயாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 515 ரூபாயாக இருந்தது.

நிப்டியின் 2022 - 2025ம் நிதியாண்டின் CAGR விகிதம் சுமார் 15% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிப்டியின் வருமானம் அதிகரிக்கும்

நிப்டியின் வருமானம் அதிகரிக்கும்

இது சொத்தின் தரம் அதிகரிப்பு, கடன் வளர்ச்சி மற்றும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம், கேப்பெக்ஸ் வளர்ச்சி, மூலதன பொருட்கள், நிறுவனங்களின் மார்ஜின் & லாபம் அதிகரிப்பு, ஆட்டோபைல் துறை, எஃப் எம் சி ஜி துறை, பார்மா, மெட்டல் ஸ், ஆயில் & கேஸ் என பல துறைகளிலும் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நிப்டியின் வருவாயும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 நிலவரம் இது தான்

2022 நிலவரம் இது தான்

2022ம் ஆண்டில் இதுவரையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி கிட்டதட்ட 5% வளர்ச்சி காணலாம். இதே காலகட்டத்தில் பி எஸ் இ ஸ்மால்கேப் 3% சரிவிலும், பி எஸ் இ மிட்கே 1% ஏற்றத்திலும் உள்ளது.

இதே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பி எஸ் இ ஐடி இன்டெக்ஸ் 24.10% சரிவிலும், பி எஸ் இ கன்சியூமர் டியுரபிள் 125 சரிவிலும், ஹெல்த்கேர் துறை 11.80% சரிவிலும், பி எஸ் இ பவர் மற்றும் பி எஸ் இ பொதுத்துறை நிறுவனங்களின் குறியீடானது முறையே 26% மற்றும் 22% ஏற்றத்தில் காணப்படுகின்றது.

2023 நிலவரம்

2023 நிலவரம்

ஆட்டோமொபல் துறை, வங்கி துறை என பலவும் ஏற்றத்தினை காணலாம். இது தவிர ரயில்வே துறை, பாதுகாப்பு துறை, வீடு மற்றும் ரோடுகளுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே எஃப் எம் சி ஜி, ஹோட்டல்ஸ், சில்லறை வர்த்தகம், பாதுகாப்பு துறை, ஹாஸ்பிட்டல்ஸ், ஜவுளித் துறை, லாகிஸ்டிக்ஸ் மற்றும் டெலிகாம் என பல துறைகளும் சந்தையில் சற்றே வளர்ச்சியினை கானலாம். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வலுவான வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023ல் டாப் பங்குகள்

2023ல் டாப் பங்குகள்

கஜாரியா செராமிக்ஸ் மற்றும் ஸ்டெர்லைட் டெக்னாலஜி பங்கு விலையானது முறையே 22% மற்றும் 28% ஏற்றம் காணலாம். இதே மாருதி சுசூகி மற்றும் CIE ஆட்டோமோட்டிவ் பங்கு விலையானது முறையே 35% மற்றும் 26% ஏற்றம் காணலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்கோ., விகார்ட் இண்டஸ்ட்ரீஸ், இந்தஸ்இந்த் வங்கி, ஹெச் டி எஃப் சி ஏஎம்சி 20% ஏற்றத்திலும் இருக்கலாம் என தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது.

 

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex may hit 71,600 in 2023: ICICI securities

sensex may hit 71,600 in 2023, nifty will touch 21,500: ICICI securities,
Story first published: Friday, December 30, 2022, 18:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X