செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தை சிறிய அளவிலான சரிவை சந்தித்தது. NSE நிஃப்டி 50 குறியீடு 36.65 புள்ளிகள் குறைந்து 22082.65 ஆகவும், 30-பங்குகள் கொண்ட BSE சென்செக்ஸ் 96.01 புள்ளிகள் குறைந்து 72989.93 ஆகவும் முடிவடைந்தது.
இந்த நிலையில் ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, ஐடி, பார்மா என பல முக்கிய துறைகள் இன்று சரிவில் முடிந்த நிலையில், விவசாய உரத் துறையில் அதிகப்படியான நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்துள்ளது.

பங்குச்சந்தை சரிவை சந்தித்த போதிலும், உரத் துறையில் சில நிறுவனங்கள் வலுவான வளர்ச்சியைக் கண்டன. அதுவும் 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது. சந்தையில் பல முன்னணி சாம்ராஜ்ஜியங்கள் பெரும் சரிவை எதிர்கொண்ட நிலையில் ஒரு சில துறை மட்டுமே தற்போது லாபத்தை எதிர்கொண்டு வருகிறது. இப்படியிருக்கையில் இதை கண்டறிவது பெரும் போராட்டமாக இருக்கிறது. அப்படி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும் துறையாக இன்றைய வர்த்தகத்தில் விவசாய துறை பங்குகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பல விவசாய உர நிறுவனங்கள் வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இதில் முன்னணி நிறுவனங்களில், பரதீப் பாஸ்பேட்ஸ் லிமிடெட் 5.65 சதவீதமும், தீபக் ஃபெர்டிலைசர்ஸ் & பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 5.20 சதவீதமும் உயர்ந்தன.
இதை தொடர்ந்து போஹ்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 4.96 சதவீதம் உயர்ந்தது. தெற்கு பெட்ரோகெமிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரங்கள் & ரசாயனங்கள் லிமிடெட் மற்றும் மங்களூர் கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் ஆகியவை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.
அக்ரோ ஃபோஸ் இந்தியா லிமிடெட், தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ட்ராவன்கூர் லிமிடெட், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் மற்றும் ஜுவாரி அக்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவையும் வளர்ச்சியடைந்தன.
இதே விவசாய உர துறையில் கிருஷ்ணா ஃபோஸ்கெம் லிமிடெட் மற்றும் கொரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியவை 3.24 சதவீதம் சரிந்தன. சம்பல் ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் 1.68 சதவீதம் சரிந்தது. கைடன் கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் மற்றும் ராமா பாஸ்பேட்ஸ் லிமிடெட் ஆகியவையும் சிறிய அளவில் குறைந்தன.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications