உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக புதன் கிழமை அன்று வர்த்தக முடிவில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்தன, மேலும் அமெரிக்காவில் வரி விதிப்பு அறிவிப்பு காரணமாக உலோகத் துறை கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்பர் உலோகம் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, நிஃப்டி மெட்டல் குறியீடு இன்று சரிவுடன் முடிந்தது. அமெரிக்கா ஏற்கனவே ஸ்டீல் மற்றும் அலுமினியத்தின் மீதான வரிகளை விதித்திருந்த நிலையில் தற்போது காப்பர் உலோகத்தையும் சேர்த்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 176.43 புள்ளிகள், அதாவது 0.21% சரிந்து 83,536.08 ஆகவும், நிஃப்டி 46.40 புள்ளிகள், அதாவது 0.18% குறைந்து 25,476.10 ஆகவும் முடிந்தன.
புதன்கிழமை வர்த்தகத்தில் பேங்க் நிஃப்டியும் சரிவை சந்தித்தது, 42.75 புள்ளிகள் அல்லது 0.07% குறைந்து 57,213.55 ஆக முடிந்தது. துறை வாரியான குறியீடுகளை பார்க்கும் போது நிஃப்டி ரியாலிட்டி மிகப்பெரிய சரிவை சந்தித்தது, அதைத் தொடர்ந்து மெட்டல் மற்றும் எண்ணெய் & எரிவாயு துறைகள் அடுத்தடுத்து சரிவடைந்த துறைவாரியான குறியீடுகளாக இருந்தன.
இந்தக் குறியீடுகள் அனைத்தும் 1% க்கும் அதிகமாக சரிந்தன. நிஃப்டி ரியாலிட்டி துறையில், பிரிகேட் எண்டர்பிரைசஸ் மற்றும் தி பீனிக்ஸ் மில்ஸ் ஆகியவை மிகப்பெரிய இழப்பை சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் 150 குறியீடு தொடர்ந்து நான்காவது நாளாக சரிவைக் கண்டது. இருப்பினும், நிஃப்டி ஸ்மால்கேப் 250 மற்றும் பார்மா குறியீடுகள் இரண்டு நாள் சரிவை இன்று முறியடித்தது. இதேபோல் நிஃப்டி ஆட்டோ அதன் மூன்று நாள் சரிவை முறியடித்தது.
நிஃப்டி குறியீட்டில் HCL டெக்னாலஜிஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை மிகப்பெரிய இழப்பை சந்தித்தன. மறுபுறம், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பவர் கிரிட் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அஷிகா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டியின் ஆய்வாளரான சுந்தர் கேவத் இன்றைய வர்த்தகம் குறித்து கூறுகையில்: "இந்திய-அமெரிக்கா வரி பேச்சுவார்த்தையின் காரணமாக முதலீட்டு சந்தையில் முதலீட்டாளர்களின் மனநிலை எச்சரிக்கையா இருப்பதை காட்டுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பில் ஆகஸ்ட் 1 பின்பு எந்தவொரு நீட்டிப்பும் வழங்கப்படாது என்றும், ஆகஸ்ட் 1 முதல் வரிகள் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்ததைத் தொடர்ந்து இது நடந்தது."
செவ்வாயன்று ஒரு டாலருக்கு 85.70 ஆக இருந்த நிலையில், இன்று ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சற்று வலுவடைந்து, 85.68 ஆக முடிந்தது


Click it and Unblock the Notifications