சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அமரிக்கப் பெடரல் ரிசர்வ்-இன் வட்டி விகித உயர்வு இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்தது.
இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடனே துவங்கிய மும்பை பங்குச்சந்தை கச்சா எண்ணெய் உயர்வு முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை உருவாகியது. இதனால் 12 மணிக்குப் பின் சென்செக்ஸ் தொடர் சரிவை சந்தித்தது.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 129.91 புள்ளிகள் சரிந்து 33,006.27 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 40.50 புள்ளிகள் சரிந்து 10,114.75 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஒஎன்ஜிசி, இன்டஸ்இந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
எஸ்பிஐ, விப்ரோ, மஹிந்தரா, ஐசிஐசிஐ வங்கி, மாருதி, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications