வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாட்களில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்காது. ஆனால் பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்ட இந்த சிறப்பு வர்த்தக நாளில், இந்திய பங்குச் சந்தையானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, பட்ஜெட் அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியவுடன் சரியத் தொடங்கின.
குறிப்பாக செக்யூரிட்டீஸ் டிரான்சாக்சன் வரி (STT) அதிகரிப்பு, மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) தொடர்பான சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது என பல காரணிகள் கடும் வீழ்ச்சியை சந்திக்க காரணமாக அமைந்துள்ளன. மேலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி உலகளாவிய பொருளாதார சூழல் காரணமாக பங்குகளை விற்று வெளியேறியதும் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதில் ஐடி மற்றும் நிதித் துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு உள்ளாகின. நீண்ட கால நோக்கில் இந்த பட்ஜெட் வளர்ச்சியை நோக்கியதாக இருப்பதால், குறுகிய காலத்தில் சரிவை காண வழிவகுத்துள்ளது.

சந்தை முடிவு எப்படி?
குறிப்பாக சென்செக்ஸ் 1,547 புள்ளிகள் குறைந்து, 80,722.94 புள்ளிகளாகவும், நிஃப்டி 495.20 புள்ளிகள் குறைந்து, 24,825.45 புள்ளிகளாவும் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக தினத்தில் ஐடி துறை குறியீடு தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் கடும் வீழ்ச்சி கண்டு சிவப்பு நிறத்திலேயே காணப்பட்டன. இருப்பினும் இது தற்காலிகமாக ஒரு சரிவு தான். நீண்ட கால அடிப்படையில் இந்த பட்ஜெட் மிகவும் சாதகமாகவே உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீண்ட கால அடிப்படையில் ஏற்றம் தான்!
அரசு தனது மூலதன செலவினத்தை 12.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது உள்கட்டமைப்பு துறை, பாதுகாப்பு உற்பத்தி துறை, செமிகண்டக்டர் துறை, மருத்துவ துறை அதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கம், சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக திட்டங்கள் என பலவும் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதோடு முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்த பங்குகள் மற்றும் குறியீடுகளை கவனிப்பதை விட, அரசு ஊக்குவிப்பு கொடுத்த குறிப்பிட்ட துறைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஐடி துறை. தரவு மையங்களுக்கு (Data Centers) 2047 வரை வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், இத்துறைக்கு இது ஒரு சாதகமான விஷயம். இதேபோன்று செமிகண்டக்டர் சார்ந்த பங்குகள். சாதகமான விஷயங்களை மட்டும் பார்க்காமல் எதிர்மறையான விஷயங்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களான எம்சிஎக்ஸ், ஏஞ்சல் ஒன், குரோ போன்ற பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியதாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகத்தில் எஸ்.டி.டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், இத்துறை சவால்களை சந்திக்க நேரிடும்.
சந்தை எப்போது சீராகும்?
அடுத்து வரும் வர்த்தக தினங்களில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வரும் மார்ச் மாதம் வரை சந்தையில் அதிரடி மாற்றங்களும் ஊசலாட்டமும் தொடர வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய நிதியாண்டு பிறந்து, பட்ஜெட் ஒதுக்கீடுகள் செயல்பாட்டுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தை நிலைபெற தொடங்கும். அப்போது நிதிநிலை வலுவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் நிலையான வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் இந்த சரிவிலிருந்து முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக அதுவரையில் முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications