இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்ததால் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) இந்திய பங்குச் சந்தை பெரும் உயர்வை கண்டது. நிஃப்டி 5 சதவீதம் உயர்ந்து 26,341.20 புள்ளிகளை தொட்டு ஆல் டைம் உச்சத்துக்கு அருகில் சென்றது. சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் உயர்ந்து 85,871 அளவை தொட்டது. இந்த ஒப்பந்தம் முதலீட்டு சந்தைக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்திய பங்குச்சந்தைக்கு பலமாக மாற முக்கியமாந காரணம் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு விதித்த வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்தது. இந்த விகிதம் பாகிஸ்தான், வியட்நாம் மற்றும் வங்கதேசத்தின் 20 சதவீதத்தை விட குறைவு. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.

இதோடு இந்திய ரூபாய் மதிப்பு 1.2 சதவீதம் வலுப்பெற்று 90.4263க்கு வந்தது. 10 ஆண்டு பத்திர லாபம் 5 அடிப்படை புள்ளிகள் குறைந்து 6.71% ஆனது. இது பணவீக்க அச்சம் குறைந்ததை காட்டுவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் உற்பத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியையும் இந்த ஒப்பந்தம் மூலம் உயர்த்தும் என காட்டுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் ஏற்றுமதி சார்ந்த துறைகளின் பங்குகள் அதிகப்படியான உயர்வை பதிவு செய்துள்ளது. இதிலும் முக்கியமாக டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறை பங்குகள் முன்னணியில் இருந்தன. பல பங்குகள் 20 சதவீத மேல் வரம்பை (upper circuit) தொட்டன.
இதை தாண்டி அதானி குழும நிறுவனங்களும் பெரும் உயர்வை கண்டன. அதானி என்டர்பிரைசஸ் 10 சதவீத மேல் லாக்இன் செய்யப்பட்டது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி போர்ட்ஸ் ஆகியவை 7 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன.

இன்றைய உயர்வுக்கு பெரிய அளவில் முதலீட்டு பலம் கொடுத்தது உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) தான், DII முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களிந் முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் பல நாள் இழப்பை இன்று ஈடுக்கட்டப்பட்டு உள்ளது.
அமெரிக்கா - இந்தியா மத்தியிலான வர்த்தகம் மூலம் டெக்ஸ்டைல், கடல் உணவு, ஆட்டோ உதிரிபாகங்கள், கெமிக்கல், நுகர்வோர் பொருட்கள் போன்ற துறைகளை சார்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMIDs) பெரும் முதலீட்டை ஈர்த்துள்ளது. இதேபோல் ஏற்றுமதியை அதிகம் சார்ந்து இருக்கும் நிறுவனங்களும் அதிகப்படியான முதலீட்டை பெற்றன. DII முதலீட்டாளர்கள் சப்போர்ட் செய்தாலும் FII முதலீட்டாளர்கள் இன்னும் பழையப்படி முதலீட்டை துவங்கவில்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை.


Click it and Unblock the Notifications