இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்தது. இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 290 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு சில மணி நேரங்களில் சுமார் ரூ.5 லட்சம் கோடி அதிகரித்தது. இன்றைய பங்குச் சந்தைகளின் எழுச்சியின் பின்னணியில், அன்னிய முதலீட்டாளர்கள், கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவை உள்ளன. வங்கி மற்றும் ஐடி துறைகளை சேர்ந்த பங்குகளை அதிகளவில் முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர்.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு நீண்ட நாட்களுக்கு பின்பு 1000 புள்ளிகளை கடந்து முடிந்துள்ளது. வாரத்தின் முதல் நாள் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.35 புள்ளிகளை அடைந்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து 2வது நாளாக கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.7,470 கோடிக்கு பங்குகளை வாங்கினர். இது அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இது பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கான எதிர்பார்ப்புகளை முதலீட்டாளர்கள் மதிப்பிட்டதால் இன்று கச்சா எண்ணெய் விலைகள் நிலையாக இருந்தது. இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 85.86ஆக இருந்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் களை கட்டியது.
ஜியோஜித் இன்வெஸ்ட்மெண்ட் சர்வீசஸின் முதலீட்டு சேவைகளின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் டாக்டர் விகே விஜயகுமார் கூறுகையில், இந்திய பொருளாதாரத்தின் மேக்ரோக்கள் மேம்படுத்துவதும், பங்குகளின் நியாயமான மதிப்பீடுகளும் அன்னிய முதலீட்டாளர்களை விற்பனையாளர்கள் என்பதிலிருந்து வாங்குபவர்களாக மாற்றியுள்ளன. மிக முக்கியமாக இது மிகப்பெரிய குறுகிய கால முதலீட்டை தூண்டியுள்ளது.
இது பங்குகளின் விலைகளின் கூர்மையான ஏற்றத்துக்கு வழிவகுத்தது. சந்தையின் உள்நோக்கம் ஏற்றமாக இருந்தாலும் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏப்ரல் 2ம் தேதி பரஸ்பர வரி விதிப்பு தினம். இது குறித்த பெரிய அளவில உருவாகி வருகிறது.
பரஸ்பர வரி விதிப்பு சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை பெரியது. முதலீட்டாளர்கள் மேலும் முதலீடு செய்வதற்கு முன், பரஸ்பர வரி விதிப்பு குறித்து தெளிவு வெளிப்படும் வரை காத்திருக்கலாம் என்று தெரிவித்தார். மேத்தா ஈக்விட்டிஸின் மூத்த துணை தலைவர் பிரசாந்த் டாப்சே கூறுகையில், நிஃப்டி முக்கிய நகரும் சராசரிகளை விட அதிகமாக உள்ளது, வரி விதிப்பு குறித்து தொடர்பான விஷயத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டால்24,069ல் 200 டிஎம்ஏ-ஐ நோக்கி ஒரு உந்துதல் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications