கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் தொடர்ந்து இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது நினைவிருக்கலாம்.
நேற்று மாலை, சென்செக்ஸ் 37,734 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,124 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அந்த கேப் அப்பைத் தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
அதன் பின் உச்சபட்சமாக 38,140 புள்ளிகள் வரை தான் அதிகரித்தது. தற்போது சற்றே இறக்கம் கண்டு 37,949 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எத்தனை பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் நிலை என்ன? வாருங்கள் பார்ப்போம்.

ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (23 செப்டம்பர் 2020) ஆசியாவில், பல முக்கிய நாட்டுப் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற சந்தைகள் மட்டுமே ஓரளவுக்கு ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (23 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.43 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.40 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.41 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 1.71 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 1,883 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,267 பங்குகள் ஏற்றத்திலும், 548 பங்குகள் விலை இறக்கத்திலும், 68 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 88 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று மீடியா, மெட்டல், பார்மா, பொதுத் துறை வங்கி தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக எஃப் எம் சி ஜி, ஐடி, ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் ஒரு சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications