இந்திய பங்குச் சந்தைகள் கடந்த செப்டம்பரில் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இந்த மாதம் பங்குச் சந்தைகள் ரத்த கண்ணீர் வடித்தன. பங்குகளின் விலை கடுமையாக சரிந்ததால் முதலீட்டாளர்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
மத்திய பட்ஜெட் சிறப்பாக இருந்தது, இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது போன்றவை பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தக போர் என்ற அச்சம் எழுந்தது.

அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் அதள பாதாளத்தில் வீழ்ந்தன.
மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. ப்ளூசிப் நிறுவன பங்குகளின் விலையும் சரிவை சந்தித்தன. இந்த மாதத்தில் இதுவரை மட்டும் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.17 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால் சில்லரை முதலீட்டாளர்கள் கதி கலங்கி உள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், பங்குகளில் முதலீடு செய்யலாமா அல்லது சிறிது காலம் ஒதுங்கி இருக்கலாமா என்ற குழப்பத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நிபுணர்கள், இந்த சரிவை வாய்ப்பாக பயன்படுத்தி முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
வெல்த் மில்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கிராந்தி பதினி கூறுகையில், பங்குச் சந்தையில் பெரிய அடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நீண்ட கால இலக்குகளை கொண்ட முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடர வேண்டும். ஏனெனில் இது குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கம்தான்.
மிட் மற்றும் ஸ்மாப் கேப் பங்குகளின் வீழ்ச்சி கடுமையாக உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்ய விரும்ப வேண்டும். பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு துறையை சேர்ந்த பங்குகளில் எந்தவொரு சரிவும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் டாக்டர் விகே விஜயகுமார் கூறுகையில், முதலீட்டாளர்கள் தற்போதைய சரிவை பயன்படுத்தி, அதிகமாக மதிப்பிடப்பட்ட மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளிலிருந்து லார்ஜ்கேப் பங்குகளுக்கு மாறலாம். லார்ஜ் கேப் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என அறிவுறுத்தினார்.
ரோய்னெட் சொல்யூஷனின் நிர்வாக இயக்குனரும், நிறுவனருமான சமீர் மாத்தூர் கூறுகையில், சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், லார்ஜ் கேப் மற்றும் பிளக்ஸி கேப் பண்டுகளுக்கு முன்னுரிமை அளித்து எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறோம். நிலையான வருமானத்திற்கு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications