இன்று இந்திய பங்குச் சந்தையில் பெரும் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது, சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 81,121-ஐ எட்டியது, நிஃப்டி 250 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,704 புள்ளிகளை எட்டியது. ஆனால் வர்த்தக முடிவில் பெரும் சரிவில் இருந்து மீண்டு சென்செக்ஸ் 624.82 புள்ளிகளையும், நிஃப்டி 174 புள்ளிகள் சரிந்து 24,826.20 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், ஐடி, மற்றும் FMCG பங்குகளில் ஏற்பட்ட விற்பனை பங்குச்சந்தையை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2.56 லட்சம் கோடி ரூபாய் குறைந்து 442.23 லட்சம் கோடியாக உள்ளது. சென்செக்ஸ் குறியீட்டில் இருக்கும் 30 நிறுவனத்தில் 24 நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தது.

இன்றைய வர்த்தகம் சரியை முக்கிய காரணங்களாக 5 காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 1.முதலீட்டாளர்கள் லாபம் பெறுவதற்காக பங்குகளை விற்பனை செய்தது, 2. இந்திய நிறுவனங்களின் பலவீனமான Q4 முடிவுகள், 3. அமெரிக்க பத்திர முதலீட்டில் அதிகப்படியான வட்டி வருமானம், 4. உலகளாவிய வர்த்தக பாதிப்பு, 5. ஆர்பிஐ மத்திய அரசுக்கு கொடுத்த ஈவுத்தொகை 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.7 லட்சம் கோடி மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது பெரும் ஏமாற்றமாக சந்தை வல்லுனர்கள் மத்தியில் பார்க்கப்படுவது இன்றைய சரிவுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
இன்றைய வர்த்ககத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு இன்றைய உச்ச அளவில் இருந்து 1,300 புள்ளிகள் சரிந்த 81,121 என்ற குறைவான அளவீட்டை எட்டியது. அதேபோல, நிஃப்டி குறியீடு 250 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,704-ஆக சரிந்தது. இந்த சரிவு, அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பதற்றங்கள் தணிந்ததால் ஏற்பட்ட பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தையில் (NSE) நிஃப்டி FMCG, ஐடி மற்றும் ஆட்டோ போன்ற துறை சார்ந்த குறியீடுகள் ஒவ்வொன்றும் 1 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. வங்கி மற்றும் நிதித்துறை குறியீடுகளான நிஃப்டி பேங்க் மற்றும் பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.7 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தன.
இதை தொடர்ந்து மருந்து மற்றும் எரிசக்தி போன்ற பாதுகாப்பு துறைகளும் சிறிய அளவில் சரிந்தன. ஆனால், பொதுத்துறை வங்கிகள், ரியால்டி மற்றும் மீடியா குறியீடுகள் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டன. இதற்கிடையில், இந்திய VIX குறியீடு 5.55 சதவீதம் உயர்ந்து, சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்திருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
நிஃப்டியில் ஜியோ பைனான்ஷியல் சர்வீசஸ், இண்டஸ்இண்ட் பேங்க், எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ், டிரெண்ட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை ஏற்றம் கண்ட பங்குகளாக இருந்தன. ஆனால், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை மிகவும் சரிவை சந்தித்த பங்குகளாக இருந்தன.
ஆட்டோ, ஐடி மற்றும் FMCG துறைகளில் ஏற்பட்ட கடுமையான விற்பனை அழுத்தம், நிஃப்டி மற்றும் சென்செக்ஸின் இரண்டு நாள் தொடர்ந்து உயர்ந்து வந்ததை இன்றைய சரிவு முடிவுக்கு கொண்டு வந்ததுள்ளது.
அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திர வட்டி விகிதம் மார்ச் மாத இறுதியில் 4.25% ஆக இருந்தது தற்போது 4.48% ஆக உயர்ந்துள்ளது, இது முதலீட்டு முடிவுகளை ஆசிய சந்தை வர்த்தகத்தை மொத்தமாக பாதித்தது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications