பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் மிக மோசமான ஒரு நாளாக அமைந்திருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு பெஞ்ச்மார்க் குறியீடுகளுமே இன்று அதிகப்படியான விற்பனை அழுத்தத்தை சந்தித்தன. இதன் காரணமாக காலை 10:32 மணி அளவில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து 72,581 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு 290 புள்ளிகள் சரிவடைந்து 22,528 புள்ளிகளாகவும் இருந்தது. 2800க்கும் அதிகமான பங்குகள் இன்றைய தினம் சிவப்பு நிறத்திலேயே காட்சி தந்தன.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி:சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மார்ச் மாதத்தில் மட்டும் நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் ஆகியவற்றின் மதிப்பு 10.5% குறைந்து இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய பங்குச் சந்தை ஒரே மாதத்தில் இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைவது இதுவே முதல் முறையாகும். நாளைய தினம் பங்குச்சந்தைக்கு விடுமுறை. எனவே இந்த நிதி ஆண்டின் கடைசி வர்த்தக நாள் இதுவாகும்.

கடந்த வாரம் எல்லாம் சரிவிலேயே காணப்பட்ட பங்குச்சந்தைகள் இந்த வாரமாவது மீண்டு வரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , நிலைமை இன்னும் இன்னும் மோசமடைந்து தான் வருகிறது. ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கச்சா எண்ணையின் விலை உயர்ந்திருக்கிறது.

பிரெண்ட் கச்சா எண்ண்எய் ஒரு பேரல் 116 டாலர்கள் என விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு மாதத்திலேயே இதன் விலை 60% உயர்ந்திருக்கிறது., இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவது, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து தொடர்ச்சியாக தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து வெளியேறிய வண்ணம் இருக்கின்றனர்.

இதன் காரணமாக இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிவிலேயே இருந்து வருகிறது. ஈரான் போர் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே பங்குச்சந்தை மீண்டு வரும். இந்திய பங்குச்சந்தை சரிவால் இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+