இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்த பெரும்பாலானவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலம் மிக மோசமான காலம் என கூறலாம். ஏனெனில் ஒன்றரை ஆண்டுகளாகவே இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவிலான ஒரு வளர்ச்சியே இல்லை. பெரும்பாலான பங்குகள் எப்போதும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் இந்திய பங்குச் சந்தை மீண்டு வரும் என அனைவரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயரத் தொடங்கியது. இது இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு கெட்ட செய்தியாக அமைந்தது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நாள்தோறும் பல ஆயிரம் கோடி பணத்தை இந்திய பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெற்ற வண்ணம் இருக்கிறார்கள். அதுவும் ஈரான் போர் தொடங்கிய இந்த பத்து நாட்களில் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகிறது. இன்றைய தினம் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1300 புள்ளிகள் சரிவடைந்தது.
பங்குச்சந்தை முடியும் போது சென்செக்ஸ் 1.72% அதாவது 1342 புள்ளிகள் சரிவடைந்து 76,863 புள்ளிகளாகவும் நிஃப்டி 394 புள்ளிகள் குறைந்து 23, 866 புள்ளிகளாகவும் இருந்தன. இன்று ஒரு நாளில் மட்டும் 6 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்து ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவில் தங்கள் கைவசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ததுதான் பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணம். நேற்றைய தினம் மட்டும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 4673 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. காலையில் பங்குச்சந்தை ஓரளவு உயரத் தொடங்கியது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று கேப் அப் முறையிலேயே பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை தொடங்கின. எனவே ஏராளமானவர்கள் கிடைத்தவரை பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்க்கத் தொடங்கினர்.
ஈரான் போர் எப்போது முடிவடையும் என தெரியாது என்பதால் கிடைத்தவரை லாபம் பார்க்கலாம் என பலரும் பங்குகளை விற்பனை செய்தது சந்தை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. ஆட்டோமொபைல் பங்குகள் மற்றும் வங்கி பங்குகள் சரிவடைந்தது நிஃப்டி பெருமளவில் சரிவடைவதற்கு காரணமாக இருந்தது. எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகளின் பங்கு மதிப்பு சுமார் 1.4% வரை வீழ்ந்தன.
ஈரான் போர் முடிவினை நெருங்கிவிட்டதாக டிரம்ப் கூறியதை அடுத்து பங்குகள் உயர தொடங்கின. ஆனால் அதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை மாறாக போர் தீவிரமடைந்துள்ளது. இந்த குழப்பமும் முதலீட்டாளர்களை புதிய முதலீடுகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கிறது.
தற்போதைக்கு ஈரான் போர் முடிய வேண்டும் அல்லது அதற்கான அறிகுறிகளாகவது தென்பட வேண்டும், ரூபாய் மதிப்பு வலுப்பெற வேண்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தையில் முதலீட்டை தொடங்க வேண்டும். இவை அனைத்தும் நடந்தால் மட்டுமே இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!



Click it and Unblock the Notifications