இந்திய பங்குச் சந்தைகளில் இ்ன்று காலையில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரம் வரை வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் இந்தியா கைவிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.
கத்தார்
கத்தாரில் நடந்த ஒரு வணிக நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்ததிற்கான விவாதங்களின் ஒரு பகுதியாக, அமெரிக்க பொருட்களுக்கு ஜீரோ வரிகளை இந்தியா முன்மொழிந்தது என்று தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்து குறித்து மத்திய அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதுதவிர, கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது, சில முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 2024 அக்டோபர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக இன்று 25,000 புள்ளிகளை கடந்தது.
இண்டஸ்இந்த் வங்கி
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், எட்டர்னல், மாருதி சுசுகி மற்றும் அதானி போர்ட்ஸ் உள்பட மொத்தம் 29 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை மட்டும் சரிவு கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே கொச்சின ஷிப்யார்டு பங்கின் விலை 7 சதவீதம் உயர்ந்து, 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூ.1,814.90ஆக அதிகரித்தது. கடந்த சில வர்த்தக தினங்களாக கொச்சின் ஷிப்யார்டு பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மட்டும் கொச்சின் ஷிப்யார்டு பங்கின் விலை 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
நிஃப்டி
பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,387 புள்ளிகள் உயர்ந்து 82,718.14 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 449 புள்ளிகள் உயர்ந்து 25,116.25 ஆக அதிகரித்தது.
74 வயதிலும் கலக்கும் சூப்பர் ஸ்டார்.. கூலி படத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications