ராக்கெட் வேகத்தில் இந்திய பங்குச்சந்தைகள்..!! நீண்ட நாட்களுக்கு பின் முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்..!!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வேகமாக ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்தன. சென்செக்ஸ், நிஃப்டி என பெரும்பாலான குறியீடுகள் இன்று சிறந்த ஏற்றத்தை கண்டன. நீண்ட காலமாக பங்குச்சந்தையில் ஏற்றமே இல்லை என புலம்பி வந்த முதலீட்டாளர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.

சென்செக்ஸ் சுமார் 1,400 புள்ளிகள் அதாவது 2% வரை உயர்ந்து, நாளின் உச்சமான 74,330 புள்ளிகளை தொட்டது. மறுபுறம், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 50 குறியீடு கிட்டத்தட்ட 400 புள்ளிகள் அதாவது 1.7% அதிகரித்து, நாளின் உச்சமான 23,056 புள்ளிகளை எட்டியது. இன்றைய தினம் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வதற்கு சில காரணங்கள் உள்ளன.

ராக்கெட் வேகத்தில் இந்திய பங்குச்சந்தைகள்..!! நீண்ட நாட்களுக்கு பின் முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்..!!

தொடர் சரிவால் பங்கு விலைகள் தற்பொழுது லாபகரமான மற்றும் நியாயமான நிலைக்கு வந்ததால், முதலீட்டாளர்கள் மீண்டும் ப்ளூ-சிப் அதாவது பெரிய நிறுவன பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை விட பெரிய நிறுவன பங்குகள் பாதுகாப்பானவை என்பதால் முதலீட்டாளர்கள் அவற்றுக்கு மாறி வருகின்றனர். இதனால் பார்தி ஏர்டெல் , ஐசிஐசிஐ வங்கி , எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் , மற்றும் டிசிஎஸ் ஆகிய முன்னணி பங்குகள் உயர்ந்து சென்செக்ஸ் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

அதிகப்படியான மதிப்பீடு காரணமாக ஏஐ பங்குகளில் வளர்ச்சி மந்தமாகலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தையை நாட வாய்ப்புள்ளது. எனவே முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பணத்தை போட தொடங்கியுள்ளனர்.

Also Read

இதுகுறித்து ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு ஆய்வாளர் வி.கே. விஜயகுமார் அளித்த பேட்டியில் இந்திய பங்களை விற்றுவிட்டு ஏஐ பங்குகளை வாங்கி வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதனை மாற்ற தொடங்கியுள்ளனர் என்கிறார்.

பங்குச்சந்தை உயர்வுக்கு மற்றுமொரு முக்கிய காரணம் நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு வருவாய் முடிவுகள் பாசிடிவாக வந்திருப்பது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவில் பத்திர முதலீட்டு லாபம் அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வெளியேற்றம் போன்ற காரணங்களுக்கு மத்தியிலும் பல நிறுவனங்கள் லாபம் காட்டியுள்ளன.

Recommended For You

முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் எச்சிஎல் டெக் ஆகியவை எதிர்பார்த்ததை விட சிறந்த நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளன. மேலும், சில சவால்கள் இருந்தாலும் நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருவதாக உணர்த்தியுள்ளன. இதன் காரணமாக, வியாழக்கிழமை உட்பட தொடர்ந்து மூன்று அமர்வுகளில் மட்டும் நிஃப்டி IT குறியீடு 9 சதவீத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதுவும் மொத்தமாக பங்குச்ச்சந்தை உயர்வுக்கு காரணமாகிவிட்டது.

இந்திய பங்குச்சந்தைகளின் இந்த ஏற்றம் அப்படியே நீடிக்க வேண்டும் என்பது தான் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு. ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாகவே இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றமே இல்லை.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+