ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா பங்குச் சந்தைகள் சரிவில் தான் இருந்து வந்தன. திங்கள், செவ்வாய், புதன் என தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவிலேயே இருந்த இந்திய பங்குச்சந்தை இன்றுதான் அதிலிருந்து சற்றே மீண்டு வந்தது.
ஆனால் நண்பகல் அளவில் பங்குச்சந்தை மீண்டும் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த சூழலில் பங்குச்சந்தை முடிவடையக்கூடிய கடைசி 30 நிமிடங்களுக்கு முன்பு இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய மேஜிக்கே நடந்தது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி தந்தது.

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான் சென்செக்ஸ் காலை வர்த்தகம் தொடங்கும் போது 79,530 புள்ளிகளாக இருந்தது இதனை அடுத்து 10.35 மணியளவில் 79,292 புள்ளிகள் என சரிந்தது. பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த சென்செக்ஸ் நண்பகல் சரியாக 2.55 மணி அளவில் 80,297 புள்ளிகள் என உயர்வு கண்டது. கிட்டத்தட்ட 900 புள்ளிகள் அதாவது சதவீத அடிப்படையில் 1.14 சதவீதம் வரை சென்செக்ஸ் உயர்ந்தது.
அதேவேளையில் நிஃப்டி காலை வர்த்தகம் தொடங்கியபோது 24,615 புள்ளிகளில் இருந்தது 9.40 மணியளவில் 24,534 புள்ளிகள் என சரிந்தது. இதனை அடுத்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த நிஃப்டி மூன்று மணி அளவில் 24,851 புள்ளிகள் என உச்சம் தொட்டது. அதாவது நிஃப்டியும் 1.17 சதவீதம் உயர்வு கண்டது. பிஎஸ்இ 150 மிட்கேப் குறியீடு, பிஎஸ்சி 250 ஸ்மால் கேப் குறியீடு ஆகியவையும் ஒரு சதவீதத்திற்கும் மேல் இன்று உயர்வு கண்டன.
குறிப்பாக 20 நிமிடங்களில் பங்குச்சந்தை திடீரென உயர்வதற்கு என்ன காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது. ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஈரான் குறிப்பிட்ட நிபந்தனையோடு அணுசக்தி திட்டங்களை கைவிடுவதற்கு தயாராக இருக்கிறது என்றும் அதற்கு அமெரிக்கா நாங்கள் ஏற்கக்கூடிய வகையிலான ஒரு மாற்று சலுகை தர வேண்டும் என்றும் கூறியதாக ஸ்கை நியூஸ் அரேபியா செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளியான உடனே இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையோடு பங்குகளை வாங்கத் தொடங்கினார்கள். இதுதான் 20 நிமிடங்களில் பங்குச்சந்தை வேகமாக உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
அதாவது 2.35 மணியளவில் 79,369 புள்ளிகளாக இருந்து 2.55 மணிக்கு 900 புள்ளிகள் உயர்வு கண்டு சென்செக்ஸ் 80,259 புள்ளிகள் என ஆனது. ஆனால் அதன் பிறகு ஈரான் நாட்டு அரசு ஊடகம் இதற்கு முன்பு ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது அவர் வெளியிட்ட தகவல் இது , அவர் இப்போது அவ்வாறு கூறவில்லை என விளக்கம் தந்தது. இதனை அடுத்து இன்றைய நாள் உச்சத்தில் இருந்து 300 புள்ளிகள் சரிந்தது சந்தை முடியும் போது சென்செக்ஸ் 79,927 புள்ளிகளாக இருந்தது நிஃப்டி குறியீடு 24,737 புள்ளிகளாக முடிவடைந்தது. ஈரான் போர் செல்லக்கூடிய பாதையை பொறுத்து நாளைய தினம் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை காணலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications