இந்திய பங்குச் சந்தைகள் 3 நாள் தொடர் விடுமுறைக்கு பின்பு இன்று துவங்கும்போதே அதிரடியான உயர்வுடன் துவங்கியது. இன்றைய உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்க அரசு 90 நாட்களுக்கு உலக நாடுகள் மீது விதித்த ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை ஒத்திவைத்ததும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து முழுமையாக விளக்கு அளிக்கப்பட்டு தான்.
மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,750 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து அதிகப்படியாக 76,907 புள்ளிகளை எட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிஃப்டி குறியீடு 550 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து அதிகப்படியாக 23,368 புள்ளிகளை எட்டியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் (TaMo) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் 4% வரை உயர்ந்தன. இந்த வலுவான முன்னேற்றம், ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்கா அறிவிக்கப்பட்ட வரி விதிப்பு மூலம் ஏற்பட்ட மொத்த இழப்புகளையும் முழுமையாக ஈடுசெய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 410.24 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை தொட்டுள்ளது. இதேபோல் அமெரிக்க அரசு துறை வாரியாக வரிகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதில் அடுத்தாக பார்மா துறை மீது வரி விதிக்கப்படும் என கணிக்கப்பட்டு வருகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கிய அடித்தளமாக இருந்தது அமெரிக்க பங்குச்சந்தையில் நேற்று பதிவான அதிரடியான உயர்வு தான், நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டெக் நிறுவனங்களின் பங்குகள் தடாலடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய அமெரிக்க அரசின் முடிவுகளையும், அந்தர் பல்டியை பார்க்கும் போது இது சீனா பிளஸ் 1 கொள்கையில் 2ஆம் பாகமாக உள்ளது.
இன்று ஆசிய சந்தைகளில், ஜப்பானின் பங்குச் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டன. ஜப்பான் பங்குச்சந்தை மற்ற நாடுகளின் சந்தைகளை விட அவை அதிக வளர்ச்சியைப் பதிவு செய்தன. மாறாக, அமெரிக்க பங்குச் சந்தையின் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் சற்று பின்னடைவை சந்தித்தன. இதற்கு காரணம் டிரம்ப் அரசின் நிலையற்ற வர்த்தகத் கொள்கை முடிவுகள் தான்.
ஆசிய பிராந்தியத்தில் டோக்கியோ நேரப்படி காலை 9:36 மணி நிலவரப்படி, எஸ்&பி 500 பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 0.1% குறைந்து காணப்பட்டன. அதே நேரத்தில், ஹாங் செங் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 0.8% உயர்வைச் சந்தித்தன. ஜப்பானின் டோபிக்ஸ் குறியீடு 1.3% உயர்ந்தது, ஆஸ்திரேலியாவின் எஸ்&பி/ஏஎஸ்எக்ஸ் 200 குறியீடு 0.2% மிதமான வளர்ச்சியைப் பெற்றது. ஐரோப்பிய பங்குச் சந்தையின் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களும் எதிர்மறையான தொடக்கத்தை சுட்டிக்காட்டின, யூரோ ஸ்டாக்ஸ் 50 பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 0.4% சரிந்தன.


Click it and Unblock the Notifications