650 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! ஏற்றத்தில் நிறைவடையுமா?

கடந்த பிப்ரவரி 20, 2020-ல் இருந்து கொரோனா பயம் இந்திய சந்தைகளை பிரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது.

விளைவு தொடர் சரிவு. எந்த அளவுக்கு என்றால் சுமார் 41,000 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் சமீபத்தில் 25,638 என்கிற புள்ளியைத் தொட்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சரி இன்றைக்கு சென்செக்ஸ் எங்கு வந்திருக்கிறது, எவ்வளவு புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது எனப் பார்ப்போம்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ் 28,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 29,294 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. நல்ல கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அந்த ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிற சென்செக்ஸ். இன்றைக்கு அதிகபட்சமாக 29,316 புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் 650 புள்ளிகள் ஏற்றத்தில் சுமார் 29,090 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

நிஃப்டி

நிஃப்டி

நேற்று மாலை நிஃப்டி 8,281 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 8,529 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 8,458 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி 177 புள்ளிகள் ஏற்றாத்தில் வர்த்தகமகிக் கொண்டு இருக்கிறது.

30 பங்குகள்

30 பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,843 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,197 ஏற்றத்திலும், 545 பங்குகள் இறக்கத்திலும், 100 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதோடு 13 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 134 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

வேதாந்தா, இன்ஃபோசிஸ், பாரத் பெட்ரோலியம், ஹெச் ட்சி எல் டெக், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃப்ன்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைடன் கம்பெனி, மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

நேற்று மார்ச் 30, 2020 அமெரிக்காவின் நாஸ்டாம் 3.62 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 0.97 % ஏற்றத்தில் வர்த்தகமாயின. பிரான்சின் சி ஏ சி 0.62 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.90 % ஏற்றத்தில் வர்த்தகமாயின என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டாலர்

டாலர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு வழியாக 76 ரூபாய்க்குக் கீழ் வந்து இருக்கிறது என்றாலும், இன்னும் 74 ரூபாய்க்குக் கீழ் வரவில்லை. இன்னும் இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாய்க்கு மேலேயே இருப்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது. 74 ரூபாய்க்கு கீழ் வந்தால் ஏதாவது இந்திய சந்தைகளுக்கு நல்லது நடக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+