நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் 10 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து, 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
அதன் பின் மீண்டும் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ், சுமாராக 3,930 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமாராக நான்கு முறை சென்செக்ஸ் வரலாறு காணாத பெரிய சரிவுகளைக் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் பெரிய சரிவு
நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் 10 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து, 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. அதன் பின் மீண்டும் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ், சுமாராக 3,930 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமாராக நான்கு முறை சென்செக்ஸ் வரலாறு காணாத பெரிய சரிவுகளைக் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் ஏற்றம் இறக்கம்
நேற்று மாலை, 25,981 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 27,056 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதே போல அதிகபட்சமாக 27,462 புள்ளிகளைத் டொட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய அதிகபட்ச புள்ளியான 27,462 புள்ளிகளை கணக்கிட்டால் சுமார் 1,480 புள்ளிகள் ஏற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி
ஆனால் தற்போது சுமாராக 26,182 புள்ளிகளைத் தொட்டு 200 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறாது சென்செக்ஸ். எனவே தான் சென்செக்ஸ் தடுமாற்றத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அதே போல
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி தற்போது 7,694 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சுமார் 84.15 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது நிஃப்டி.
ஆசிய சந்தைகள்
இன்று மார்ச் 24, 2020, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர, மற்ற ஆசியாவின் அனைத்து சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி 5.27 % அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்ச ஏற்றம் என்றால் தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 0.57 % ஏற்றம் கண்டு இருக்கிறது.
30 பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,456 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 522 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 850 பங்குகள் இறக்கத்திலும், 84 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை விவரம்
இன்ஃபோசிஸ், ஹெச் யூ எல், டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், சிப்லா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இண்டஸ் இண்ட் பேங்க், யெஸ் பேங்க், டைடன் கம்பெனி, பார்தி இன்ஃப்ராடெல், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications