கடந்த அக்டோபர் 09, 2019-ல் இருந்து இன்று வரை சென்செக்ஸ் பெரிய சரிவுகளைக் காணாமல் அப்படியே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 30, 2019 முதல் இன்று வரை சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்து கொண்டு இருக்கிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அக்டோபர் 31, 2019-ல் இருந்து இன்று வரை சந்தையின் குறைந்தபட்ச புள்ளியே 40,014 தான். ஆக கடந்த ஐந்து வர்த்தக நாட்களாக சந்தை 40,00 புள்ளிகளுக்கு மேல் அத்தனை வலுவாக வர்த்தகமாகி வருகிறது.
இருப்பினும் ஹெச் டி எஃப் சி, ரிலையன்ஸ் போன்ற அதிக வெயிட்டேஜ் பங்குகளே இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதால் சென்செக்ஸும் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

உலக பொருளாதார காரணிகளான அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இப்போது 70.72-க்கு வர்த்தகமாகி வருவது பாசிட்டிவ் செய்தியாக இருக்கிறது. ஆனால் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.31 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு சின்ன எச்சரிக்கையாகவே பார்க்கிறது இந்திய சந்தை.
நேற்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 40,301 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,445 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமார் 145 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கியது. அந்த இறக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 40,200 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 100 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி இண்டெக்ஸ் நேற்று மாலை 11,941 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே நிஃப்டி 11,974 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கியது. அந்த இறக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 11,903 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 37 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பி.எஸ்.இ-யில் 2,266 பங்குகள் வர்த்தகமாகின்றன. 989 பங்குகள் ஏற்றத்திலும், 1,151 பங்குகள் இறக்கத்திலும், 126 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. 2,345 பங்குகளில் 43 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 65 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் பொதுத் துறை வங்கி தவிர மற்ற துறை சார் இண்டெக்ஸ்களும் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மீடியா, பார்மா போன்ற இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் இறக்கம் காண வைத்துக் கொண்டு இருக்கின்றன.
யூபிஎல், யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், சன் பார்மா, ஈஷர் மோட்டார்ஸ், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications