இந்த ஏப்ரல் மாதத்தின் முதல் நாளே சென்செக்ஸ் இறக்கத்தில் தான் தொடங்கியது. வழக்கத்தை விட இந்த ஏப்ரல் 2020ல் கொஞ்சம் அதிக நாட்கள் சந்தை விடுமுறையாக இருக்கின்றன.
இன்றைக்கான வர்த்தகத்தில் சென்செக்ஸ், நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று இந்திய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? இந்த ஏற்றம் நீடிக்குமா..?
சென்செக்ஸ் நிலவரம்
நேற்று இந்திய பங்குச் சந்தைகள் மகாவீரர் ஜெயந்தி என்பதால் விடுமுறையாக இருந்தது. கடந்த வெள்ளிக் கிழமை மாலை சென்செக்ஸ், 27,590 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 28,898 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. நல்ல கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் இப்போது வரை தன் ஏற்றத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. தற்போது சுமார் 1,370 புள்ளிகள் ஏற்றத்தில் 28,960 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நிஃப்டி
ஏப்ரல் 03, 2020, வெள்ளிக் கிழமை, மாலை நிஃப்டி 8,083 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 8,446 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 8,421 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி 337 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பி எஸ் இ
சென்செக்ஸின் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 02 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,863 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,384 ஏற்றத்திலும், 352 பங்குகள் இறக்கத்திலும், 127 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
இண்டஸ் இண்ட் பேங்க், மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச் சி எல் டெக், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஈஷர் மோட்டார்ஸ், ஐடிசி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக சந்தைகள்
ஏப்ரல் 06, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் 7.33 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 3.08 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 4.61 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 5.77 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின. உலக சந்தைகள் கொரோனா பீதியில் இருந்து வெளி வரத் தொடங்கிவிட்டனவா என்கிற கேள்வி எழுகிறது.
ஆசிய சந்தைகள்
ஆச்சர்யமாக, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர, மற்ற ஆசிய சந்தைகள் எல்லாம் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 4.85 சதவிகித ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. எனவே இந்திய சந்தைகளும் வழக்கம் போல ஏற்றத்தை பிரதிபலித்துக் கொண்டு இருப்பதாகவே தெரிகிறது.
உஷார்
இப்படி எல்லா காரணிகளும், உலக சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதால், இன்றைய சந்தை ஏற்றத்தில் நிறையவடையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் ஏதாவது ஒரு நெகட்டிவ் செய்தி வந்தால் கூட கண்ட ஏற்றம் எல்லாம் காணாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஜாக்கிரதையாக வியாபாரம் செய்யவும்.


Click it and Unblock the Notifications