கடந்த வியாழக்கிழமை (01 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 38,697 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,956 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 39,263 புள்ளிகள் வரைத் தொட்டது. இன்று எப்படியாவது 39,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடையும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
வர்த்தக நேர முடிவில் 276 புள்ளிகள் ஏற்றம் கண்டு 38,973 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், எந்த பங்குகள் எல்லாம் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின? ஆசிய & ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
மும்பை பங்குச் சந்தை நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 15 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 15 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,905 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,491 பங்குகள் ஏற்றத்திலும், 1,229 பங்குகள் விலை இறக்கத்திலும், 185 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 141 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், டி சி எஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டி சி எஸ் மட்டும் 7.3 சதவிகிதம் ஏற்றம் கண்டு இருக்கிறது. பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (05 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.83 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.89 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.76 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (05 அக் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தவிர, மற்ற சந்தைகள் எல்லாமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி போன்ற சந்தைகள் 1.2 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications