ஐந்து வர்த்தக நாட்களாக ஏற்றத்தில் சந்தை! இன்று 304 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்!

கடந்த 30 செப் 2020 தொடங்கி, இன்று (07 அக்டோபர் 2020) வரை, ஐந்து வர்த்தக நாட்களிலும் சென்செக்ஸ் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

நேற்று (06 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 39,574 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 39,633 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 39,968 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் 304 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39,878 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸ் இண்டெக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் எல்லாம் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின? ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

இன்று (07 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.04 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.12 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.30 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.

 ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று (07 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கியைத் தவிர மற்ற சந்தைகள் எல்லாமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஹாங் காங் நாட்டின் ஹேங் செங் மற்றும் தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் போன்ற சந்தைகள் ஒரு சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாயின. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் இன்று விடுமுறையில் இருக்கிறது.

 பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், டைட்டன், பஜாஜ் ஆட்டோம் மாருதி, ரிலையன்ஸ் அல்ட்ரா டெக் சிமெண்ட் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், சன் பார்மா, டாடா ஸ்டீல், என் டி பி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

மும்பை பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச் சந்தை நிலவரம்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 14 பங்குகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,873 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,078 பங்குகள் ஏற்றத்திலும், 1,596 பங்குகள் விலை இறக்கத்திலும், 199 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 140 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+