32,000 தொட்ட சென்செக்ஸ்! பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை!

நேற்று, பங்குச் சந்தை பற்றிய செய்தியில் "சென்செக்ஸ் கடந்த 24-03-2020 அன்று, கொரோனாவுக்குப் பிறகான வாழ் நாள் இறக்கப் புள்ளியாக 25,638 புள்ளிகளைத் தொட்டது. அதன் பிறகு 30-04-2020 வரை ஓரளவுக்கு நன்றாக ஏற்றம் கண்டது. ஏப் 30, 2020 அன்று, சென்செக்ஸ், கொரோனா வீழ்ச்சிக்குப் பிறகான உச்சப் புள்ளியாக 33,887 புள்ளிகளைத் தொட்டது.
ஆனால் அதன் பின் தொடர்ந்து சென்செக்ஸ் சரிந்து கொண்டே இருக்கிறது. இதுவரை சென்செக்ஸ் மீண்டும் தன் ஏற்ற டிரெண்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை" எனச் சொல்லி இருந்தோம்.

32,000 தொட்ட சென்செக்ஸ்! பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை!

நாம் சொன்னது சென்செக்ஸுக்கு கேட்டு விட்டதோ என்னவோ... இன்று சென்செக்ஸ் 32,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சரி இன்றைய சென்செக்ஸ் & உலக சந்தைகள் கள நிலவரத்தைப் பார்ப்போம்.

சென்செக்ஸ் நிலவரம்

நேற்று மாலை சென்செக்ஸ், 31,605 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 31,827 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 31,641 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 32,032 புள்ளிகளைத் தொட்டு 427 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,904 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,297 பங்குகள் ஏற்றத்திலும், 511 பங்குகள் இறக்கத்திலும், 96 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

மே 27, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.77 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. லண்டனின் எஃப் டி எஸ் இ 1.26 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.79 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.33 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. இந்த பாசிட்டிவ் அலை ஆசிய சந்தைகளிலும் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றன.

ஆசியா

ஆசியாவில் ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா தவிர மற்ற நாட்டுச் சந்தைகள் எல்லாம் கொஞ்சம் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங்செங் சந்தை 1.48 % இறக்கிறது.

பங்கு விலை நிலவரம்

இண்டஸ் இண்ட் பேங்க், ஈஷர் மோட்டார்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்ஃபோசிஸ், விப்ரோ, டி சி எஸ், ஐ டி சி, ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

டாலர் & கச்சா எண்ணெய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வழக்கம் போல 75.50 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று 75.77 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்னெய் விலை சுமாராக 34 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+