கடந்த வாரம் முழுக்க வீழ்ச்சி கண்டு வந்த சென்செக்ஸ், கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 835 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, சென்செக்ஸ் 37,388 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 37,756 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். வர்த்தக நேர முடிவில் 592 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,981 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், எந்த பங்குகள் எல்லாம் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின? மற்ற உலக பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
மும்பை பங்குச் சந்தை நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 27 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 03 பங்குகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,848 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,925 பங்குகள் ஏற்றத்திலும், 758 பங்குகள் விலை இறக்கத்திலும், 165 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 117 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பவர் கிரிட், ஓ என் ஜி சி, சன் பார்மா போன்ற பங்குகள் எல்லாம் நான்கு சதவிகிதத்துக்கு மேல் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஹிந்துஸ்தான் யுனிலிவர், இன்ஃபோசிஸ், நெஸ்ட்லே போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (28 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.49 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.95 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.67 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (28 செப் 2020) ஆசிய சந்தைகளில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர, மற்ற சந்தைகள் எல்லாமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தைவானின் தைவான் வெயிடெட் போன்ற சந்தைகள் 1.8 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications