நல்ல ஏற்றத்தில் சென்செக்ஸ்! டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே!

ஜூன் 01, 2020 அன்று மாலை பங்குச் சந்தை பற்றிய செய்தியில், சென்செக்ஸின் 1 நாள் டெக்னிக்கல் சார்ட்டில் கப் அண்ட் சாசர் பேட்டன் உருவாகி இருப்பதாகச் சொல்லி இருந்தோம்.

அதே போல, குறைந்தபட்சம் 1,200 புள்ளிகளாவது அதிகரிக்கலாம் எனவே டார்கெட் 34,500-ஆக வைத்துக் கொள்ளலாம் எனவும் சொல்லி இருந்தோம்.

அதை எல்லாம் உண்மையாக்கும் விதத்தில் இன்று சென்செக்ஸ் வர்த்தகமாகி இருக்கிறது. சரி இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன, உலக சந்தைகள் என்ன ஆயின? வாருங்கள் பார்ப்போம்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ், 33,825 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,185 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் அதிகபட்ச புள்ளியாக 34,422 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக, 597 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நாம் சொன்ன படி சென்செக்ஸ் 34,500 புள்ளிகளை கிட்டத்தட்ட தொடும் தூரத்தில் இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,875 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,354 பங்குகள் ஏற்றத்திலும், 441 பங்குகள் இறக்கத்திலும், 80 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

ஜூன் 02, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.59 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. ஜூன் 02, 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.87 % ஏற்றாத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.02 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 3.75 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆசியாவில் இந்த ஏற்றம் சிறப்பாக பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

ஆசியாவில் எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, தென் கொரியாவின் கோஸ்பி பங்குச் சந்தை 2.83 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஹாங்காங்கின் ஹேங்செங் சந்தை 3.35 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இருப்பதிலேயே குறைவான ஏற்றம் என்றால் சீனாவின் ஷாங்காய் காம்போஸைட் தான் 0.51 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், பிரிட்டானியா, ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. டாக்டர் பார்தி இன்ஃப்ராடெல், விப்ரோ, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+