நேற்று (05 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 38,973 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 39,336 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 39,623 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் 600 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39,574 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் இண்டெக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் எல்லாம் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின? ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், ஹெச் டி எஃப் சி, இண்டஸ் இண்ட் பேங்க், மஹிந்திரா & மஹிந்திரா, ஏஷியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா ஸ்டீல், நெஸ்ட்லே, லார்சன் & டியூப்ரோ, சன் பார்மா, என் டி பி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
மும்பை பங்குச் சந்தை நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 06 பங்குகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,862 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,510 பங்குகள் ஏற்றத்திலும், 1,188 பங்குகள் விலை இறக்கத்திலும், 164 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 153 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (06 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.29 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.22 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.05 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (06 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், எல்லாமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தைவானின் தைவான் வெயிடெட் போன்ற சந்தைகள் 1.2 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாயின. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் கடந்த 30 செப்டம்பர் 2020 முதல் வர்த்தகமாகவில்லை. வரும் 8 அக்டோபர் 2020 வரை விடுமுறை தான்.


Click it and Unblock the Notifications