செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து சென்செக்ஸ் ஒரு சீரான ஏற்றத்தில் வர்த்தகம் ஆகாமல் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நேற்று மாலை, சென்செக்ஸ் 38,193 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,516 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 38,878 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 38,367 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ்.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 38,840 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சரி, இன்றைய சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகள் நிலவரம் என்ன? ஐரோப்பிய பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? வாருங்கள் பார்ப்போம்.
ரிலையன்ஸ் காரணம்
ரிலையன்ஸ் ரீடெயில் கம்பெனியின் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை அமேசான் கம்பெனிக்கு விற்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு ரிலையன்ஸ் ரீடெயிலில் சில முதலீடுகளும் வரத் தொடங்கி இருக்கின்றன. எனவே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை, என் எஸ் இ-ல் இன்று ஒரே நாளில் 7.29 % அதிகரித்து இருக்கிறது. இதனால் சென்செக்ஸில் 448 புள்ளிகள் அதிகரித்து இருப்பதாகச் பி எஸ் இ வலைதளமே சொல்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் விலை ஏற்றத்திலும், 09 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,876 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,789 பங்குகள் ஏற்றத்திலும், 922 பங்குகள் விலை இறக்கத்திலும், 165 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 109 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், ரிலையன்ஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது.
டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், கோட்டக் மஹிந்திரா பேங்க், டைடன், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய & ஆசிய சந்தைகள்
இன்று (10 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.58 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.27 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.04 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி, தைவானின் தைவான் வெயிடெட், தென் கொரியாவின் கோஸ்பி போன்ற சந்தைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications