தொடர்ச்சியாக கடந்த ஆறு வர்த்தக நாட்களில் இறக்கம் கண்டு வந்த சென்செக்ஸ், இன்று ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதுவும் 835 புள்ளிகள் (2.28 %) ஏற்றம் கண்டு இருக்கிறது.

நேற்று மாலை, சென்செக்ஸ் 36,553 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 36,991 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், 835 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,388 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் 30 பங்குகள் எந்த பங்குகள் எல்லாம் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின? மற்ற சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச் சி எல் டெக்னாலஜி, பார்தி ஏர்டெல், இண்டஸ் இண்ட் பேங்க், லார்சன் & டியூப்ரோ போன்ற பங்குகள் எல்லாம் 4.5 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஏஷியன் பெயிண்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா, சன் பார்மா, ஹெச் டி எஃப் சி, ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் 1 சதவிகிதத்துக்குள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 30 பங்குகளும் விலை ஏற்றம் கண்டன. பி எஸ் இ-யில் மொத்தம் 2,818 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,988 பங்குகள் ஏற்றத்திலும், 660 பங்குகள் விலை இறக்கத்திலும், 170 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 94 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (25 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.77 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.95 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.90 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரமாரி இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (25 செப் 2020) ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சிங்கப்பூரின் ஸ்ட்ர்ரெய்ட் டைம்ஸ், தென் கொரியாவின் கோஸ்பி போன்ற சந்தைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற சந்தைகள் எல்லாமே இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications