கண் கொள்ளா காட்சி... 1,600 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! ஆனா அது நடக்கலயே!

கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் நேற்றும், இன்றும் சென்செக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

நேற்று சுமாராக 580 புள்ளிகள் ஏற்றம் என்றால் இன்று சென்செக்ஸ் சுமாராக 1,600 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

ஆனாலும் சில விஷயங்கள் நடக்கவில்லை என்பதால், முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் கொஞ்சம் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ் 28,288 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 28,460 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் தன் குறைந்தபட்சமாக 29,932 புள்ளிகளைத் தொட்டது. இன்றைக்கான வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 29,915 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 1,627 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்து இருக்கிறது.

வருத்தம்

வருத்தம்

இவ்வளவு ஏற்றம் கண்ட சென்செக்ஸ் இன்னும் ஒரு 70 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருந்தால், இந்த வாரம் 30,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடைந்து இருக்கலாமே. அப்படி 30,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். ஆனால் நடக்கவில்லையே..!

நிஃப்டி

நிஃப்டி

நேற்று மாலை நிஃப்டி 8,263 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 8,284 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 8,749 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 486 புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. இப்படி இரண்டு பங்குச் சந்தை இண்டெக்ஸ்களும் ஒரளவுக்கு நல்ல ஏற்றம் கண்டு இருப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நிம்மதியைக் கொண்டு வந்து இருக்கிறது.

30 பங்குகள்

30 பங்குகள்

சென்செக்ஸில் 30 பங்குகளில், 28 பங்குகள் ஏற்றத்திலும், 02 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,605 பங்குகள் வர்த்தகமாயின. 1,446 பங்குகள் ஏற்றத்திலும், 1,011 பங்குகள் இறக்கத்திலும், 148 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,605 பங்குகளில் 19 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 587 பங்குகளின் விலை 52 வார இறக்கத்தையும் தொட்டு வர்த்தகமாயின.

பங்குகள் நிலவரம்

பங்குகள் நிலவரம்

பார்தி இன்ஃப்ராடெல், ஓ என் ஜி சி, கெயில், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் விலை ஏற்றம் கண்டன. யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், அதானி போர்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள் எல்லாம் சுமார் 3.79 - 6.09 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி தவிர மற்ற எல்லா சந்தைகளும் 1.61 - 7.95 % வரை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+