மே 13-ம் தேதியில் இருந்து தொடர்ந்து சென்செக்ஸ் சரிந்து கொண்டே தான் இருந்தது. நேற்று மே 19-ம் தேதி தான் கொஞ்சம் தேறியது சென்செக்ஸ்.
இன்று 622 என ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டு இருக்கிறது சென்செக்ஸ். ஆனாலும் தன் கொரோனாவுக்குப் பின் உச்சப் புள்ளியான 33,887 புள்ளிகளை இன்னும் தொடவில்லை என்பது இன்னும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு கவலையை உண்டாக்கிக் கொண்டு தான் இருக்கிறது.
சரி இன்றைக்கு சென்செக்ஸ் என்ன ஆனது? உலக சந்தைகள் விவரம் என்ன? எந்த பங்குகள் ஏற்றம் கண்டன? வாருங்கள் ஒரு ரவுண்ட் அடிப்போம்.
சென்செக்ஸ் நிலவரம்
மே 19, 2020 மாலை சென்செக்ஸ், 30,196 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,159 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,157 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. வர்த்தக நேர முடிவில் 30,818 புள்ளிகளைத் தொட்டு 622 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,486 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,262 பங்குகள் ஏற்றத்திலும், 1,060 பங்குகள் இறக்கத்திலும், 164 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
மே 19, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.54 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. இன்று மே 20, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.40 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.17 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.42 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசியா
இன்று மே 20, 2020, ஆசியாவில் சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தான் இருப்பதிலேயே அதிகமாக 0.94 % ஏற்றத்தில் வர்த்தகமானது.
பங்கு விலை நிலவரம்
ஸ்ரீ சிமெண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரி, ஹெச் டி எஃப் சி, ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், இண்டஸ் இண்ட் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications