995 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்! ஜாலியில் முதலீட்டாளர்கள்!

இன்னும் சில நாட்களில், இந்தியப் பொருளாதாராம் செயல்படத் தொடங்கும் என்கிற நம்பிக்கை, பொருளாதாரம் முழுமையாக லாக் டவுனில் இருந்து வெளி வந்து செயல்படத் தொடங்குவதற்கு முன் அரசு ஏதாவது உதவித் திட்டங்களை அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு... போன்றவைகளால் சென்செக்ஸ் நல்ல ஏற்றத்தைக் கண்டு இருக்கிறது.

995 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்! ஜாலியில் முதலீட்டாளர்கள்!

இந்தியாவின் வங்கிகள் மற்றும் நிதி சேவைத் துறை சார் பங்குகள் தட்டி தூக்கி இருக்கின்றன. நிஃப்டியின் வங்கி இண்டெக்ஸ் 7.28 % & நிஃப்டி நிதி சேவைகள் துறை 5.86 % ஏற்றம் கண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சரி, இன்று சந்தையில் என்ன ஆனது என ஒரு ரவுண்ட் பார்ப்போம்.

சென்செக்ஸ் நிலவரம்

நேற்று மாலை சென்செக்ஸ், 30,609 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,793 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் 31,605 புள்ளிகளைத் தொட்டு 995 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. 18-05-2020-க்குப் பின், மீண்டும் சென்செக்ஸ் 31,000 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,497 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,378 பங்குகள் ஏற்றத்திலும், 948 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

உலக பங்குச் சந்தைகள்

மே 27, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 1.34 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.93 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.89 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாகவே உலக பங்குச் சந்தைகளும் பாசிட்டிவாக இருப்பதையே இது காட்டுகிறது.

பங்கு விலை நிலவரம்

ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, க்ராசிம், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், டிஅட்டன் கம்பெனி, ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+