அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் இந்திய பங்குச்சந்தையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பல மாதங்களாக சரிவிலேயே இருந்த இந்திய பங்குச்சந்தைகள் சர்ரென உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரிய ஏற்றத்துடன் தான் வர்த்தகத்தையே தொடங்கின. முன்னணி பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதே போல நிஃப்டி 24,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. இதனால் பல பங்குகளின் மதிப்புகள் உயர்ந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் பச்சை நிறத்தை பார்த்து நிம்மதி அடைந்தனர்.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு தான். கச்சா எண்ணெய் விலை கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் பெரும்பகுதியை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்வதால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது நாட்டின் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதுடன், அரசின் நிதிச்சுமையும் குறையும். இது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் மீண்டும் தீவிரமாக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவும் இந்திய பங்குச்சந்தைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அமெரிக்க சந்தை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய பங்குச்சந்தைகளில் நிகழ்ந்த மாற்றம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளன.
டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல், ஈரான் போர் நீட்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் தான் இந்திய பங்குச்சந்தைகள் கடும் அழுத்ததிலும் சரிவிலும் இருந்தன. ஆனால் டிரம்ப்புக்கு கிடைத்துள்ள தேர்தல் பின்னடைவு நிலைமையை மாற்றி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவே பங்குச்சந்தைகள் ஏற்றத்துக்கு மற்றொரு காரணம் ஆகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற முன்னணி பெருநிறுவனங்களின் பங்குகள் மற்றும் பிற முக்கிய துறை பங்குகளின் விலை இன்று சிறந்த ஏற்றம் கண்டு பங்குச்சந்தையை தூக்கி நிறுத்தியுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக, நிஃப்டி தனது முக்கிய ஆதரவு நிலைகளை தாண்டி வலுவான காளையின் பிடியில் இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் மூலம் ஈரான் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தான் கச்சா எண்ணெய் விலையும், அமெரிக்க டாலர் மதிப்பும் சரிந்து வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச்சந்தைகளீல் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

