மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 2018 ஜனவரி 23-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் 36,000 புள்ளிகளை எட்டியுள்ளது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 10,900 புள்ளிகளைக் கடந்துள்ள நிலையில் விரைவில் 11,000 புள்ளிகளை மீண்டும் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்மை நிலவரம்
பிறபகல் 12:05 மணி நிலவரபடி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 244.79 புள்ளிகள் என 0.68 சதவீதம் உயர்ந்து 36,179.37 புள்ளிகளாகவும், நிப்டி 72.75 புள்ளிகள் என 0.67 சதவீதம் உயர்ந்து 10,925.65 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
காரணம்
கடந்த சில வாரங்களாக அமெரிக்க, சீனா இடையிலான வர்த்தகப் போரினால் பங்கு சந்தை மந்தமாக இருந்து வந்த நிலையில் கார்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை முடிவுகள் வெளியாக இருப்பதால் அதன் மீது வர்த்தகர்கள் தங்களது கவனத்தினைத் திருப்பி இருப்பதே இதற்கான முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
லாபம் அளித்து வரும் நிறுவனங்கள்
பஜாஜ் ஆட்டோமொபைல், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ் நிறுவனப் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.
நட்டம் அளிக்கும் நிறுவனங்கள்
அதே நேரம் கோடாக் வங்கி, சன் பார்மா, மஹிந்தரா & மஹிந்தரா, ஹீரோ மோட்டி கார்ப் பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications