கொரோனாவால் சென்செக்ஸ், 25,650 புள்ளிகள் வரை சரிந்தது. அதன் பிறகு தான் இறக்கம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் காணத் தொடங்கியது.
கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின், இன்று தான் புத்தம் புதிதாக 33,700 புள்ளிகளைத் தொட்டு பங்குச் சந்தையில் வியாபாரம் செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வயிற்றில் பால் வார்த்து இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் என்ன ஆனது? கச்சா எண்ணெய் விலை என்ன? டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் விலை ஏதாவது தேறி இருக்கிறதா..? வாருங்கள் ஒரு ரவுண்டு பார்ப்போம்.
சென்செக்ஸ்
நேற்று மாலை, 32,720 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 33,381 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 33,887 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் வர்த்தக நேர முடிவில் 33,717 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்து இருக்கிறது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய குளோசிங் புள்ளியை கணக்கிட்டால் 997 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் 2,606 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,342 பங்குகள் ஏற்றத்திலும், 1,093 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின. இதில் 31 பங்குகள் 52 வார விலை உச்சத்தையும் தொட்டது குறிப்பிடத்தக்கது.
டாலர் கச்சா எண்ணெய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75.10 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 25.29 டாலருக்கு வர்த்தகமாகிறது. WTI கச்சா எண்ணெய் விலை சுமாராக 17.35 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பங்குகள்
டாடா மோட்டார்ஸ், யூ பி எல், ஓ என் ஜி சி, வேதாந்தா, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. சன் பார்மா, ஹெச் யூ எல், சிப்லா, இண்டஸ் இண்ட் பேங்க், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications