கடந்த 17 ஜூலை 2020 அன்று 37,020 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ், கடந்த இரண்டே வர்த்தக நாளில் (20 ஜூலை & 21 ஜூலை) சுமாராக 910 புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது.
ஒருவேளை இன்றைக்கு சென்செக்ஸ், வர்த்தகமாகத் தொடங்கிய 38,178 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டு இருத்நால், ரவுண்டாக 1,150 புள்ளிகள் அதிகரித்தது என்று சொல்லலாம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சென்செக்ஸ் 38,178 புள்ளிகளில் இருந்து ரிவர்ஸ் கியர் போட்டு மெல்ல இறக்கம் கண்டு கொண்டு இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
ஆக்ஸிஸ் பேங்க், வேதாந்தா, என் டி பி சி, பவர் கிரிட் கார்ப், ஐ டி சி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. விப்ரோ, ஹீரோ மோட்டோ கார்ப், ஹிந்துஸ்தான் யுனிலிவர், இன்ஃபோசிஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
21 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை 0.81% இறக்கத்திலேயே வர்த்தகமானது. 21 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.13 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.22 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.96 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. ஆக ஐரோப்பிய சந்தைகள் களை கட்டி இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று 22 ஜூலை 2020, ஆசியாவில், தைவானின் தைவான் வெயிடெட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போஸைட் போன்ற பங்குச் சந்தைகளைத் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் 0.99 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸ்
நேற்று சென்செக்ஸ், 37,930 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,178 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 37,910 புள்ளிகளைத் தொட்டு மெல்லிய இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 38,000 புள்ளிகளை தொட்டது சந்தோஷம் தான், ஆனால் நிலைக்கவில்லையே..! இன்று வர்த்தக நேர முடிவில் 38,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடையுமா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,244 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,040 பங்குகள் ஏற்றத்திலும், 1,079 பங்குகள் இறக்கத்திலும், 125 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக மும்பை பங்குச் சந்தையில், 74 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications