மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இண்டெக்ஸ், கடந்த மார்ச் 2020 சரிவுக்குப் பின், இன்று தான் முதல் முறையாக 39,000 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.
நேற்று மாலை 38,799 புள்ளிகளில் முதல் முறையாக வர்த்தகம் நிறைவடைந்த சென்செஸ், இன்று முதல் முறையாக 39,008 புள்ளிகளைத் தொட்டது. இருப்பினும் இந்த ஏற்றம் நிலைக்கவில்லை.
தற்போது அந்த 39,000 புள்ளிகளில் நிலைக்காமல், சென்செக்ஸ் மீண்டும் 38,705 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,635 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,115 பங்குகள் ஏற்றத்திலும், 1,369 பங்குகள் விலை இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 189 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று ஐடி, எஃப் எம் சி ஜி,மெட்டல், பார்மா, ரியாலிட்டி தவிர மற்ற எல்லா செக்டார் சார்ந்த இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக பொதுத் துறை வங்கி இண்டெக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகமாகி, ஒட்டு மொத்த சென்செக்ஸையும் ஏற்றம் காண உதவியாக இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.ஸ்ரீ சிமெண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், கெயில், பார்தி இண்ஃப்ராடெல், யூ பி எல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (25 ஆகஸ்ட் 2020, செவ்வாய்க்கிழமை), ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஹாங்காங்கின் ஹேங் செங், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, தென் கொரியாவின் கோஸ்பி சந்தை 1.53 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
நேற்று, 24 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.60 % ஏற்றத்தில் வர்த்தகமானது. நேற்று, 24 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.71 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.28 % எற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.36 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications