40,010 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்!

நேற்று மாலை சென்செக்ஸ் 39,467 புள்ளிகளில் நிறைவடைந்து. இன்று காலை 39,888 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 40,010 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 39,594 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.

40,010 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்!

ஆக, சென்செக்ஸ் இன்றும் ஒரு புதிய உச்சத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கலாம்..

இன்று சென்செக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்திலும், விலை இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? மற்ற உலக பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாருங்கள் பார்ப்போம்.

பங்கு விலை நிலவரம்

ஓ என் ஜி சி, டெக் மஹிந்திரா, ஹெச் டி எஃப் சி பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஹெச் சி எல் டெக், ரிலையன்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி, எஸ் பி ஐ, கோட்டக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,549 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 833 பங்குகள் ஏற்றத்திலும், 1,590 பங்குகள் விலை இறக்கத்திலும், 126 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 96 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (31 ஆகஸ்ட் 2020, வெள்ளிக்கிழமை), ஆசியாவில், தைவானின் தைவான் வெயிடெட், தென் கொரியாவின் கோஸ்பி, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, ஜப்பானின் நிக்கி 1.43 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இண்டெக்ஸ்

இன்று, நிதி சேவைகள், எஃப் எம் சி ஜி, ஐடி, ரியாலிட்டி தவிர மற்ற எல்லா துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மற்ற எல்லா துறைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மீடியா, ஆட்டோ போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+