சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை, சுமார் 350 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்ததால் அனலிஸ்டுகள் சென்செக்ஸ் மேல் நோக்கி வர்த்தகமாகலாம் எனச் சொல்லி இருந்தார்கள்.
ஆனால் அதே நேரத்தில் 41,000 புள்ளிகள் ஒரு நல்ல சப்போர்ட்டாக இன்னும் வலு பெறவில்லை என்பதை நாமே பல பங்குச் சந்தைச் செய்திகளில் குறிப்பிட்டு இருந்தோம். அதே போல இன்று சென்செக்ஸ் தங்களின் 41,000 புள்ளிகளில் நிலைத்து நிற்க முடியாமல் சரிந்து இருக்கிறது.

அதோடு சென்செக்ஸை டெக்னிக்கல் சார்ட்டைப் பார்த்தால், மீண்டும் சென்செக்ஸ் டே சார்ட்டில், ஒரு இறக்க டிரெண்ட் தொடங்கி இருப்பதாகவே தெரிகிறது. எனவே நாளையும் இறக்கம் காணவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி இறக்கம் கண்டால் 40,750 முதல் சப்போர்ட்டாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து 40,600 புள்ளிகள் வலுவான சப்போர்ட்டாகத் தெரிகிறது.
ஒருவேளை சந்தையில் ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் காணத் தொடங்கினால், 41,000 புள்ளிகள் முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதன் பிறகும் நல்ல ஏற்றம் கண்டால் 41,150 வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,009 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,168 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,938 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 70 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,131 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,060 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,702 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,144 பங்குகள் ஏற்றத்திலும், 1,342 பங்குகள் இறக்கத்திலும், 216 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,702 பங்குகளில் 55 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 150 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
டி சி எஸ், ஹெச் சி எல் டெக், டெக் மஹிந்திராம் கெயில், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. க்ராசிம், அதானி போர்ட்ஸ், ஐடிசி, கோல் இந்தியாம் ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications