இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் பொருளாதாரம், வர்த்தகம் அனைத்தும் மோசமாக இருக்கும் வேளையிலும் மும்பை பங்குச்சந்தை சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ வங்கி மும்பை பங்குச்சந்தையின் தொடர் வளர்ச்சி குறித்துப் பொருளாதார, வர்த்தக நிலைக்குத் தொடர்பு இல்லாமல் பங்குச்சந்தை இயங்கி வருகிறது என்று முதலீட்டாளர்களை எச்சரிக்கை உடன் இயங்க வேண்டும் எனக் கூறியது.
ஆனாலும் பங்குச்சந்தை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்நிலையில் முக்கியமான கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
2 லட்சம் புள்ளிகளைத் தொடும் சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அடுத்த 10 வருடத்தில் 4 மடங்கு வளர்ச்சி அடைந்து 2,00,000 புள்ளிகளை எட்டும். இந்த வளர்ச்சிக்கு ஆதரவாகக் கார்பரேட் நிறுவனங்களின் லாபத்தில் உருவாகும் நிலையான வளர்ச்சி மற்றும் சாதகமாகச் சர்வதேச சந்தைகள் இருக்கும் என மோதிலால் ஆஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் ராம்தியோ அகர்வால் தெரிவித்துள்ளார்.
40 வருட சென்செக்ஸ் பயணம்
கடந்த 40 வருடத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகளில் இருந்து 52,000 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளதை நான் பார்த்துள்ளேன். இந்த வளர்ச்சி நேராக இல்லை என்றாலும், வேகத்திலும் பல மாற்றங்கள் இருந்தாலும் முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்பை அளித்துள்ளது என ராம்தியோ தெரிவித்துள்ளார்.
கார்பரேட் நிறுவனங்களின் லாப அளவீடுகள்
மேலும் அடுத்த 10 வருடத்தில் கார்பரேட் நிறுவனங்களின் லாப அளவீடுகள் சராசரியாக 15 சதவீதமாக இருக்கும். இதனால் மூலம் சென்செக்ஸ் குறியீடு எளிதாக 2,00,000 புள்ளிகளை அடைய முடியும் எனவும் கணித்துள்ளார் ராம்தியோ.
இந்தியா அடுத்த சீனா
இந்தியா அடுத்த சீனாவாக உருவெடுக்க அனைத்து விதமாக வாய்ப்புகளும் ஆதாரங்களும் உள்ளது. உலகில் மிகப்பெரிய ஜனநாயகம் நாடு, அதிக மிடில் கிளாஸ் மக்கள் கொண்ட நாடு, அதிக இளம் மக்கள் தொகையைக் கொண்ட நாடு, ஒருங்கிணைந்த சந்தையை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளது.
கொரோனா - ஒரு தற்காலிக தடை
இதனால் அடுத்த சில வருடத்தில் சீனாவிற்கு நிகராக வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் கொரோனா தொற்று என்பது ஒரு தற்காலிக தடை மற்றும் பிரச்சனை மட்டுமே விரைவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பு எனத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications