கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 38,168 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி அதிகபட்சமாக 38,556 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் இப்போது சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைக் கூட தொட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.
கடந்த வெள்ளிக் கிழமை மாலை, சென்செக்ஸ் 37,877 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,062 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,119 புள்ளிகளைத் தொட்டது.
ஆனால் அடுத்தடுத்து இறக்கங்களை கண்டு அதிகபட்ச இறக்கமாக 37,734 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. தற்போது 37,850 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,743 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,537 பங்குகள் ஏற்றத்திலும், 1,061 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 133 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
ரிலையன்ஸ், ஈஷர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், என் டி பி சி, எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. என் டி பி சி, ஈஷர் மோட்டார்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று 17 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், தென் கொரியாவின் கோஸ்பி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் அதிகபட்சமாக 2.34 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
14 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.21 % இறக்கத்தில் வர்த்தகமானது. 17 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.11 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.04 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.13 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications