நேற்று மாலை, சென்செக்ஸ் 38,756 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,904 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 39,013 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது.
அதன் பின், 38,753 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு இருக்கிறது. தற்போது 38,850 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சரி இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன? எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்
சன் பார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி, ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஐ டி சி, மாருதி சுசூகி, ஏஷியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,603 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,388 பங்குகள் ஏற்றத்திலும், 1,039 பங்குகள் விலை இறக்கத்திலும், 176 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 131 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று, ஆட்டொமொபைல், எஃப் எம் சி ஜி, பொதுத் துறை வங்கி, ரியாலிட்டி தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக வங்கி, நிதி சேவைகள், ஐடி, தனியார் வங்கிகள் போன்ற செக்டார்கள் 0.70 % சதவிகிதத்துக்கு மேல், ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த செக்டார்கள், சென்செக்ஸின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (15 செப்டம்பர் 2020), ஆசியாவில், ஜப்பானின் நிக்கி அற்றும் இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. நேற்று அமெரிக்காவின் நாஸ்ஆக் 0.87 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications