நேற்று மாலை சென்செக்ஸ் 38,900 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை 38,892 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 39,036 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 38,736 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.
ஜிடிபி செண்டிமெண்டால், சென்செக்ஸ், 31 ஆகஸ்ட் 2020 அன்று 839 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. அந்த வீழ்ச்சியில் இருந்து, இன்னும் சந்தை மீண்டு வரவில்லை. சென்செக்ஸ் 31 ஆகஸ்ட் 2020 அன்றே 40,010 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
இன்று சென்செக்ஸின் 30 பங்குகளில், எந்தெந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்திலும், விலை இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்
பவர் கிரிட் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ்,
ஹெச் சி எல் டெக்,
பார்தி ஏர்டெல்,
மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பஜாஜ் ஆட்டோ,
எஸ் பி ஐ,
ஆக்ஸிஸ் பேங்க்,
ஏஷியன் பெயிண்ட்ஸ்,
ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 12 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,534 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,351 பங்குகள் ஏற்றத்திலும், 1,053 பங்குகள் விலை இறக்கத்திலும், 130 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 71 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (2 செப்டம்பர் 2020), ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, தென் கொரியாவின் கோஸ்பி 0.63 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இண்டெக்ஸ்
இன்று, எஃப் எம் சி ஜி, ஐடி, மீடியா, மெட்டல் தவிர மற்ற எல்லா துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், ஆட்டோமொபைல், ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications