135 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! 30-ல் 22 பங்குகள் ஏற்றம்!

நேற்று மாலை, சென்செக்ஸ் 38,979 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,200 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. இது தான் இன்றைய உச்சப் புள்ளியாகவும் இருக்கிறது.

அதன் பின், கொஞ்சம் சரிந்து, 39,064 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு இருக்கிறது. தற்போது 39,115 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

மும்பை பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான சென்செக்ஸ் 30-ல் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகள் 22 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்றைய வர்த்தகத்தில் எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? மற்ற நாட்டுப் பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்

சன் பார்மா, மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோட்டக் மஹிந்திரா பேங்க், நெஸ்லே, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,122 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,288 பங்குகள் ஏற்றத்திலும், 715 பங்குகள் விலை இறக்கத்திலும், 119 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 88 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

இண்டெக்ஸ்

இண்டெக்ஸ்

இன்று, எஃப் எம் சி ஜி துறை தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக பார்மா துறை 3.89 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆட்டோமொபைல், ஐடி, மீடியா, ரியாலிட்டி போன்ற செக்டார்கள் 0.70 % சதவிகிதத்துக்கு மேல், ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த செக்டார்கள், சென்செக்ஸின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (18 செப்டம்பர் 2020), ஆசியாவில், சிங்கப்பூரின் ஸ்ரெய்ட் டைம்ஸ், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் 1.27 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+