நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஐந்து நாட்களாக ஆத்ம நிர்பார் திட்டம் தொடர்பாக பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
சிறு குறு தொழில் செய்பவர்கள் தொடங்கி விண்வெளி, அணுசக்தித் துறை வரை பல திட்டங்களை அறிவித்தார்.
ஆனால் இந்திய பங்குச் சந்தைகள், இந்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகளுக்கு செவி சாய்க்கவில்லை போலத் தான் தெரிகிறது.
மே 13 - 17 வரை
மே 13 அன்று சென்செக்ஸ் 32,008 புள்ளிகளில் நிறைவடைந்தது. மே 14 - 31,122-க்கும், மே 15 - 31,097 புள்ளிகளுக்கும் நிறைவடைந்தன. மே 18 (இன்று) குறைந்தபட்சமாக 30,027 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக சென்செக்ஸில் ஒரு டவுன் டிரெண்டே உருவாகிவிட்டது எனச் சொல்லலாம்.
சென்செக்ஸ் நிலவரம்
மே 15, 2020 அறு மாலை சென்செக்ஸ், 31,097 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 31,248 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஓரளவுக்கு நல்ல கேப் அப்பில் தொடங்கினாலும் ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,027 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 30,027 புள்ளிகளைத் தொட்டு 10,70 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,837 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 464 ஏற்றத்திலும், 1,259 பங்குகள் இறக்கத்திலும், 114 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
மே 15, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.79 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 1.01 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.11 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.24 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்ரு எப்படி வர்த்தகமாகத் தொடங்குகிறது எனப் பார்ப்போம்.
பங்கு விலை நிலவரம்
சிப்லா, வேதாந்தா, பார்தி இன்ஃப்ராடெல், பிரிட்டானியா, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications